பக்கம்:நல்ல தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நல்ல தமிழ் தென்கோடியில் வாழும் சுமார் ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களால் இம்மொழி பேசப்பெற்று வாழ்கின்றது. இன்னும் பர்மா, மலேயா, இங்கிலாந்து, இலங்கை,ஆப்பிரிக்கர், பிஜித் தீவுகள், தென்னாப்பிரிக்காப் போன்ற நாடுகளிலும் பம்பாய், க்ல்கத்தா, டில்லி போன்ற நம்நாட்டுத் தலை நகர்கள் பல வற்றிலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். சுருங்கச் சொன்னால் கால்டுவெல் என்ற மேல் நாட்டு அறிஞர் காட்டியபடி, எங்கெங்கு உழைப்பு உண்டோ, அங்கங்கெல்லாம் தமிழனைக் காணலாம். தமிழர் பேசும் மொழி தமிழ் மொழி; அது வழங்கும் நாடு தமிழ் நாடு. இத்தமிழ் நாட்டைப் பழங்காலத்தில் தமிழ் வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் அருமைத் தாய்மொழியைப் போற்றி வளர்த்தார்கள். இடையில் வந்து ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் அவ்வளவு நன்றாகப் பரவ வில்லை என்னலாம். என்றாலும், இந்திய நாடு உரிமை பெற்றபிறகு தமிழ்நாடு அரசாங்க்ம் தமிழ் வளரப் பலவகை யில் ப்ாடு படுகிறது. தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்குத் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை உண்டாகி விட்டது. தமிழ் ஆட்சி மொழி ஆகிவிட்டது. எனவே, தமிழ் மொழியை அனைவரும் தவறு இல்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளல் அவசியம். தமிழ்ப்பலக்கலைக் கழகம் அமைத்து தமிழைப் பலவகையில் வளர்க்க இன்றைய அரசாங்கம் செயல் ப்ெற்றுச் சிறக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன ஆங்கிலம் பற்றியிருந்த இடங் களையெல்லாம் இப்போது தமிழ் தனக்குரியனவாக்கிக் கொண்டு வருகிறது. பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் களில் நடைபெறும் சொற்பொழிவுகள் தமிழில் ஆற்ற்ப் பெறு இன்றன. அமைச்சர்கள் தமிழிே ல் யே பேசுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/14&oldid=775067" இலிருந்து மீள்விக்கப்பட்டது