பக்கம்:நல்ல தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது கல்ல தமிழ்? .1.1 மாநிலப் பணியாளர்களாகிய பெரிய அலுவலர்களும் தமிழில் பேசுகிறார்கள். தமிழிலேயே கையெழுத்து இடுகிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் சாதாரண மனிதன்கூடத் தன் தாய் மொழியில், மேல் உள்ளவர்களுக்குத் தன் குறைய எடுத்து விளக்குகிறான். ஆம்! இந்த நிலையில் தமிழைப் பிழை இல்லாமல் எழுதவும் பேசவும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகிறது அல்லவா? எந்த ஒரு மொழியையும் திருத்தமாகவும் பிழையின்றிச் செம்மையாகவும் பேசினாற்றான்-எழுதினாற்றான்.-அந்த மொழியின் சிறப்பும், தொன்மையும், பிற நல்ல இயல்புகளும் விளங்கும். தமிழ் மிகு பழங்காலந்தொட்டே வழங்கி வந்த மொழியான காரணத்தால் எத்தனையோ மாற்றங்களை அடைந்து, கடைசியில் தொல்காப்பியர் காலத்துக்கு முன் இன்றைய நிலையை அடைந்துள்ளது. எந்த மொழியும் தோன்றிய காலத்தை ஒட்டிப் பலப்பல மாறுதல்களைப் பெற்றே வளர்ச்சியுறும். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கில மொழியில் நூற்றாண்டுதோறும் எத்தனை எத்தனையோ மாற்றங்களை நாம் காண வில்லையா? பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றண்டுகளில் உண்டான நல்ல ஆங்கில இலக்கியங்களைக்கூட இன்றுஇந்த இருபதாம் நூற்றாண்டுக்கு இடையில் - சிறந்த ஆங்கிலப் புலவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே! வடமொழி யுங்கூடக் காளிதாசர் போன்ற பெருங்கவிஞர்கள் உண்டா வதற்கு முன்னே எத்தனையோ மாற்றங்களையெல்லாம் பெற்று வளர்ந்தது என்று மேலை நாட்டு ஆராய்ச்சியாள ரெல்லாரும் கூறுகின்றனர். அவை போன்றே தமிழும் தொல்காப்பியர் காலத்துக்கு முன் எத்தனையோ மாற்றங் களைப் பெற்று, இன்று உள்ள நிலையில் அமைந்துள்ளது. தொல்காப்பியர் காலத்துக்கும் இன்றைக்கும் சில எழுத்துக் களில் மாற்றங்களைக் காண்கிறோம். எல்லா மொழிகளும் மாற்றத்துக்கு உரியனவே. பழையன கழிதலும் புதியன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/15&oldid=775069" இலிருந்து மீள்விக்கப்பட்டது