பக்கம்:நல்ல தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘12 கல்ல தமிழ் புகுதலும் வழுவல கால வகையி னானே' என்று தமிழ் இலக் கணமாகிய நன்னூல் மாற்றத்துக்கு இடம் தருகிறதே! இவவாறு மாற்றங்கள் உண்டாகும் போது அறிஞர்கள் சிந்தித்தே மாற்றம் செய்வார்கள். இன்று ஆங்கில மொழி யிலேயே ஆங்கில உச்சரிப்புக்கும் எத்தனையோ வேறுபாடு தளைக் காண்கிறோம். எழுத்தமைப்பிலும் அப்படியே. இந்த மாற்றங்களை எந்தத் தனி மனிதனும் தன் விருப்பம் போல மாற்றி அமைத்துவிட்டான் என்று சொல்ல இயலாது. அறிஞர்கள் ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளையே ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு ஏற்றுக்கொண்ட முடிவு களின் அடிப்படையிலேதான் அந்தந்த மொழிகளின் இலக் கணங்கள் அமையும். தொல்காப்பியர் இதை எண்ணியே இலக்கணம் செய்தாலும், பலர் முன்னமே ஆராய்ந்த முடிவு கள் அவை என்பதை விளக்க என்ப" என்றும், என்மனார் புலவர் என்றும் பல சூத்திரங்களில் கூறியுள்ளார். எனவே, தமிழ்மொழி என்பது பல்வேறு அறிஞர்களால் காலந்தோறும் வரையறுக்கப்பட்ட இலக்கண வரம்பில் நின்று, தொல்காப் பியம், நன்னூல் முதலிய இலக்கணங்கள் காட்டிய நெறியிலே அமைதியாய்ச் சென்றுகொண்டிருக்கிறது. என்றாலும், இன்று பலர் அந்த இலக்கண வரம்புகளை அறியாதிருக்கின் றனர். இது வரையில் அறியாதிருப்பினும் தவறில்லை. இன்று தமிழ் மொழியே ஆட்சி மொழியாய் அரியணை ஏறிய பிறகும் அதை வழங்கும் இலக்கண வரம்பை அறியாது வாழ் தல் முறையாகுமா? * 。 マ ー

மொழிகள் எல்லாவற்றிலுமே சில பல சிக்கல்கள் இருக் சின்றன என்பதை மொழி நூல் வல்லவர் யாவரும் அறிவர். மொழியின் அமைப்பையும் அ டி ப் ப ைட யை யும் உணராதவர்களே மொழியை எப்படிப் பேசினாலும் தவறு 'இல்லை என நினைப்பார்கள்; எப்படி எழுதினாலும் தவறு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/16&oldid=775071" இலிருந்து மீள்விக்கப்பட்டது