பக்கம்:நல்ல தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது நல்ல தமிழ்? 13 இல்லை என வாதிப்பார்கள். கதவைத் திரக்க” என்றால் கேட்பவருக்குப் பொருள் புரிந்துவிடுகின்றது; ஆகவே ஏன் 'திறக்க என்றுதான் எழுதவேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்?' என்பர் சிலர். தமிழில் உள்ள :ற'கர 'ர'கர பேதத்தால் வருகின்ற இடர்ப்பாடு இது. இது போன்றே 'ண' கர, னகர, 'ந'கர வேறுபாடுகளையும் பிறவற்றையும் தமிழ் மொழி கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படைகளை நன்கு அறிந்து கொண்டாற்றான் அவற்றை எப்படி எழுதினால் சிறக்கும் என்ற உண்மை புலப்படும். அந்தத் துறையில் எனது எழுத்து ஓரளவு உதவும் என்னும் துணி புடையேன். மொழி அமைப்பில் எத்தனையோ அடிப்படைகள் உள்ளன. அதிலும் தமிழ் போன்ற பழைய செம்மொழிகளும் அவற்றின் எழுத்துக்களும் சொற்களும் ஆராய்ந்து ஆராய்ந்து அமைக்கப்பெற்றன. தொல்காப்பியத்தில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, என்று ஒரு சூத்திரம் உண்டு. அதன்படி ஆராய்ந்தால், தமிழில் பொருளற்ற சொற்களோ வீண் அசைகளோ இல்லை என்பது நன்றாக விளங்கும். அது போன்றே எழுத்துக்களின் அமைப்புக் களுக்கும் பொருளும் காரணமும் காட்ட இயலும். மேல் நாட்டு அறிஞராகிய கால்டுவெல் அவர்கள் தமிழைப் பல காலம் கற்று, யாரும் காண இயலாத ஒப்பிலக்கணம’ என்ற ஒரு நூலையும் எழுதிவிட்டுச் சென்றார். தமிழ் எழுத்துக் கள் தமிழ்ச்சொற்கள் ஆகியவை ஏன், எவ்வாறு, இன்றைய அமைப்பில் அமைக்கப்பெற்றுள்ளன என்பதை அவர் காட்டி யிருக்கிறார். அத்தனையும் நான் இங்கே காட்ட நினைத் தால், அது ஒரு பெரு மொழிநூலாக அமையும். எனவே, பின்னர்த் தேவையாகும் இடங்களில் எடுத்துக் காட்டுகின் றேன். நல்ல தமிழ் என்ற உடனே ஏதோ உயர்ந்த இலக்கிய நடையைப் பற்றி நான் எழுதப் போவதாக நினைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/17&oldid=775073" இலிருந்து மீள்விக்கப்பட்டது