பக்கம்:நல்ல தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நல்ல தமிழ் கொள்ள வேண்டா. உயர்ந்த நடையில் புரியாத சொற் களை எழுதித் தம் திறமையைக் காட்டிப் பாட்டும் உரை நடையும் எழுதிய காலம் என்றோ கழிந்துவிட்டது அக் காலத்தை நான் குறை கூறவில்லை. அதனால் பலரும் பயன் அடைய முடியாது என்பதே என் கருத்து. ஒரு சிலர் வேண்டு மானால் அதைப் படித்துப் படித்துச் சுவைக்கலாம். ஆனால், நமக்கு வேண்டுவது எல்லோருக்கும் விளங்கக்கூடிய எளிய தமிழேயாகும். மொழிப்பற்றோ, மொழி ஆராய்ச்சியில் விருப்பமோ இல்லாத சாதாரண ஒரு மனிதன், தனது வாழ் வின் தேவைக்காகத் தன் கருத்தை வெளியிட வேண்டு மானால், அவனும் தவறு இல்லாத வகையில் தமிழைப் பேச வோ எழுதவோ வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தமிழை எழுதப் படிக்கத் தெரியாதவன் கூட, நல்ல தமிழில் பேசித் தன் கருத்தை வெளியிட வேண்டும் என்பதை அனை வரும் ஒத்துக்கொள்வர். இன்று பேச்சு நடை வேறு, எழுத்து நடை வேறு என்ற வகையில் மொழி இரு வேறு பாதைகளில் செல்ல நினைக் கின்றது. ஆனால், அது இயலாத ஒன்று. இந்த நிலை யில் உலகில் பல மொழிகளுக்கு உண்டு என்றாலும், அவை எழுத்து நடையில் இலக்கண வரம்பிலும் மரபிலும் நின்றே வளர்ந்து வருகின்றன. தமிழ் நாட்டிஓ, பேசுவது போல எழுதினால் என்ன? என்றுகூடச் சிலர் கேட்கின்றனர். அது பொருந்துவதாகுமா எண்ணிப் பாருங்கள். மாந்தர் சோம்பல் நிலைக்கு அடங்கியவர். சிலறடைய நிலை அளவின் எல்லை கடந்து அமைவதும் உண்டு. அப்போது அவர்தம் நாக்கும் அசைய மறுத்துவிடும் போலும் ஆகவே, அவர்கள் பேசுவது யாருக்கும் விளங்காத ஒன்றாக அமைந்து விடும். சென்னையில் அது ப்பான்ற பேச்சை நாம் அதிக மாகக் கேட்க முடியும், இழுத்துக்கொண்டு வந்தாஸ்' என் பதை இஸ்திகினு வந்தான் என்று சொல்லுவதும் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/18&oldid=775075" இலிருந்து மீள்விக்கப்பட்டது