பக்கம்:நல்ல தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 إي-ر எது நல்ல தமிழ்? விட்டான்' என்பதை 'வந்துட்டான்' என்று சொல்வதும் நாம் நாள்தோறும் கேட்பனவே. இவை போன்ற எண்ணற்ற சொற்கள் பேச்சு வழக்கில் வந்து எழுத்து வழக்கை விட்டு நம்மை எங்கோ அழைத்துச் செல்கின்றன. இந்தப் பேச்சு வழக்கில் பாமரர் மட்டுமின்றிப் பண்டிதர்களுங்கூடத் தவறி விடுகின்றார்கள். எனவே, இவற்றையெல்லாம் எழுத்து வடிவிய் கொண்டுவரத் தொடங்கினால் மெரழியின் கதி என்னர்வது! உலகில் யாரும் எந்த மொழியிலும் இந்த வழக்கை வின்ம்புவார்கள் என்று சொல்ல இயலாது. தமிழ் மொழியில் சில இலக்கண விதிகள் எல்லோருக்கும் விளங்கவில்லை எனச் சிலர் வாதிப்பர். ஒரு சிலர் தகக்கு அவற்றை பின்பற்ற முடியவில்லையானால், மொழிக்கே அவை தேவை இல்லை என்று கூறும் அளவிற்குக்கூடச் சென்று விடுகின்றனர். ஆனால், சற்று ஆராய்து எண்ணிப் பார்த்தால், அத்தகைய வரம்புகள் இருப்பது சரி என்றே தோன்றும். ஆங்கில மொழியில் அதற்கென வரையறுக்கப் பட்ட இலக்கண வரம்மை மீறித் தவறாக எழுதினால் கவலையுறும் நம்முள் பலர், தமிழில் அப்படி எழுதினால் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை; ஏதோ பொருள் விளங்கி விட்ட தல்லவோ என்று கூறி ஆறுதல் அடைகின்றனர். இலக்கண வரம்பை அறிந்து முறைப்படி ஒழுங்காகவும் மரபு கெடாமலும் எளுதவிட்டால், மொழியும் அத்மொழிவழி அமையும் நாடும் மற்றவரால் எவ்வளவு தாழ்த்தி மதிக்கப் பெறும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் உள்ள இலக்கண முறையோ, அன்றிமொழி யின் அமைப்போ, அத்துணை விளங்க இயலாத கடின நிலை யில் இல்லை. ஒரு சில மொழிகளுக்கு இருக்கின்ற எத்துணை யோசிக்கல் நிலையுடைய அமைப்புக்கள் தமிழில் இல்லை, மேலும் எழுத்துக்கள் அமைப்பும் அவை சேர்ந்து வரும் சொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/19&oldid=775077" இலிருந்து மீள்விக்கப்பட்டது