பக்கம்:நல்ல தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.6 நல்ல தமிழ் தளும் சொற்றொடர்களும் சீர்திருந்திய எளிய இலக்கண எல்லைக்சள்ளேயே அமைந்துள்ளன. இத்தகைய நல்ல செம்மையான அ ைம ப் பு முறை இருந்தும், பலர் தவறாகத் தமிழ் மொழியை எழுதியும் பேசி யும் வருகின்றனரே என்ற ஐயம் எழுதல் இயல்பு அதற்கு (மக்கிய காரணம் தமிழ் இலக்கண அமைப்பு அனைவருக்கும் விளங்காதது என்று பலரும் தம்முள் அதுபற்றி அறிவதற்கு முன்னரே முடிவு கட்டிவிடுவதாகும். நாட்டில் எப்படி எழுதினாலும் ஏன் என்று கேட்க இயலாத நிலையும் ஒரு காரணம். இன்னொரு முக்கிய காரணம், ஆங்கில மொழி யில் இருப்பது போலச் சொற்களை வரிசைப்படுத்தி, அகராதி ஆக்கி, ஒவ்வொரு சொல்லினுடைய உச்சரிக்கும் முறை, அச்சொல்லோடு சேரும் பிற சொற்களின் அமைப்பு, சேரும்போது மாறும் நிலை இவை போன்றவற்றைச் சுட்டிக் காட்டி விளக்கும் நல்ல அகாரதிகள் தமிழில் இல்லை. இப் போது அரசாங்கத்தின் துணையால் தமிழ்ப்பல்கலைக் கழகம் அத்துறையில் தொழிற்பட இயங்கியுள்ளதென அறிகிறேன். பழைய அகாரதி (Lexicon) போன்று அன்றி, நல்ல ஆய்வாள ரிடம் இ ப் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அ ந் த அகாரதித் தொகுதி வெளிவரின் நல்ல பயன் உண்டு என நம்பலாம். - தமிழ் இலக்கண நூல்கள் இந்த முறைகளையெல்லாம் திட்டமாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டியிருந்தாலும், அவை பெரும்பாலும் விளங்காத சூத்தி ரங்களாய் இருப்பதாலேயே பலரும் அறிந்துகொள்ள இயல வில்லை. அவற்றுள் ஒரு சிலவற்றை எடுத்துக்காட்டி நல்ல தமிழ் எழுதும் சில வழிகளைத் தொடர்ந்து விளக்க முயல் கிறேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/20&oldid=775080" இலிருந்து மீள்விக்கப்பட்டது