பக்கம்:நல்ல தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எழுத்தும் ஒளியும் தமிழ் எழுத்துக்களின் அமைப்பையும் முறையையும், வழக்கில் வரும் விதங்களையும் புரிந்து கொண்டால் கூடிய வரையில் பிழையற எழுதப் பழகிக்கொள்ளலாம். தமிழ் எழுத்துக்களின் அமைப்பே மொழியின் நிலையை நன்றாகக் காட்ட வல்லது. தமிழ் மொழி தோன்றிய காலத்தில் இருந்த எழுத்துக்களின் ஒலி வடிவமோ, வரி வடிவமோ இன்று உள்ளது என்று கூற இயலாது. மொழி வரலாற்றில் அது இயலாத ஒன்று. எனவே, எழுத்துக்கள் தோன்றிய நாள் தொட்டு எத்தனையோ மாறுபாடுகளைப் பெற்ற தமிழ் எழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்திற்குப்பின் பெருமாறுதல்களைப் பெறவில்லை. இடைக்காலத்தில் பல்வேறு மொழிச் சார்புடைய எழுத்துக்கள் நாட்டில் உலவின போதிலும், அவை தமிழ் எழுத்துக்களின் அடிப் படையை மாற்றவில்லை என்பதும் நன்கு தெரிகிறது. எனினும், எழுத்து வழக்கத்தில் இன்று சிலர் சில எழுத்துக் களைத் திரித்து வழங்குவதைக் காண்கிறோம். நன்னூலில் எ, ஒ என்ற இரண்டும் மேல் புள்ளி பெற்று மெய்யெழுத்தைப் போல வரும் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. எனினும் இன்று நாம் அவ்வாறு எழுதுவதில்லை. இலக்கணம் கூறிய வடிவில் இன்று நாம் மாறுபட்டிருப்பது இந்த அமைப்பு ஒன்றிலேதான். மற்றவற்றுள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறுபாடு இல்லை. - தமிழ் எழுத்துக்களை முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டாகப் பிரித்துள்ளார்கள். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் முதல் எழுத்துக்களாகும்; மற்றவை சார்பு எழுத்துக்கள். இவை பற்றிய விளக்கங்கள் இங்கே தேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/21&oldid=775082" இலிருந்து மீள்விக்கப்பட்டது