பக்கம்:நல்ல தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நல்ல தமிழ் பிற அணிகளெல்லாம் உவமை என்னும் பேராற்றின் கிளை நதிகளேயாகும். இவற்றைப் படிக்கப்படிக்க நன்கு புரிந்து கொள்ளலாம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களின் அமைதியையும் அறிவதே நல்ல தமிழை அறிவதாகும். நாம் இது வரை இவற்றையெல்லாம் ஒரளவு கண்டு வந்தோம். இவற்றின் எல்லை விரிந்தது. இவக்கண நூலாசிரியர்களே எல்லாவற்றிற்கும் புறநடை வகுத்துள்ள மையின், நாம் வரையறுத்துக் கூறு இயலாது. பள்ளி யில் பயிலும் மாணவர்கள் தங்கள் தமிழ்ப்பாடங்களை முறையாகப் பயிலும் போது அவற்றில் உள்ள இந்த இலக்கண மரபுகளை அறிந்து கொள்ள வேண் டும். பின் தாங்கள் எழுதும் க ட் டு ைர க ளி லும் பாடல்களிலும் இவற்றை முறை அறிந்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பழகின் வருங்காலத்தில் அவர்கள் நல்ல தமிழ் எழுத்தாளர்களாக வருவார்கள் என்பது உறுதி. மற்றவரும் இந்த வகையில் குறைவற்ற தமிழ் எழுதப்பழகின் நலன் விளையும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு இலக் இயங்களைப் பயின்று பயின்று உணரத் தொடங்கினால், யாரும் நல்ல தமிழ் எழுத முடியும் என்ற உண்மையைக் கூறி அமைகின்றேன். மக்களுக்கு நல்ல தமிழ் உருவாகும் நிலை இது என்று கூறி அத்தமிழை வளர்க்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு என் உரையை முடித்துக் கொள்ளு கிறேன். வாழ்க நல்ல தமிழ் வளர்க அதன் பண்பு நலன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/132&oldid=775063" இலிருந்து மீள்விக்கப்பட்டது