பக்கம்:நல்ல தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியும் ജേഖ 127 இவற்றுள் இல்பொருள் உவமை என்பது ஒன்று. இல் லாத பொருளை உவமையாகக் கூறலாமா? அது தவறு அது, வா? எனினும், சிலவற்றை விளக்க அது பயன்படுகிறது. அதனால் யாருக்கும் கெடுதல் இல்லை. எனவே, எடுத்துக்கொள்ளலாம் என்பர் புலவர். தண்டி அலங்காரப் பாடலைக் காண்போம். அதனை இதோ இந்தத் எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின் வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண்-கல்லீர்! முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும் அகம்போலு மெங்க ளகம்’, வில்லினையொத்த புருவத்தினையும் வேல் போன்ற நெடிய கண்ணினையும் உடைய நல்லீர், எங்கும் உன், கமலப்பூக்களின் அழகும் செறிந்து பொருந்துமாயின், எம் முடைய முகத்தினை ஒக்கும்; என முறுவலைச் செய்தா, மருவி வாழும் இடம்போலும் எங்கள் உள்ளம் என்பது இதன் பொருள். எல்லாக் கமலங்களின் அழகும் ஒன்று சேர் வது இல்லை அல்லவா! எனவே, இது இல்பொருள் உவமை, இல்லாததனை உவமையாக்கியுரைப்பது இதன் இலக்கண்ம். இவ்வாறே பல உவமைகள் உள. உருவகம் என்பது ஒன்று. 'காளை போன்றவன் வந்தான்’ என்பது உவமை, அவனையே காளையாக்கி, காளை வந்தான்' என்பது உரு வகம், ஆங்கிலத்தில் இந்த இரு வகை மரபும் உண்டு. உவ மையைக் காட்டிலும் உருவகத்தால் அந்தப் பொருள்களின் தன்ன்ம சிறக்கிறது அல்லவா? இந்த உருவகமும் பல வகை யாக அமையும். உருவகத்தில் உவமானமே அல்லது எடுத்துக் காட்டுக்கென வரும் பொருளாகவே உவமேயத்தைக் குறி, பது மரபு. இந்த இரு அணிகளையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். நான் முன் கூறியபடி ஆராய்ந்து பார்த்தால், இந்த உருவகமும் உவமையுள் அடங்கும். இது போன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/131&oldid=775061" இலிருந்து மீள்விக்கப்பட்டது