பக்கம்:நல்ல தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - நல்ல தமிழ் மற்றும் இத்துறை காட்ட வரும் பல பாடல்கள் பெரும்பா லும் தோழி கூற்றாகவே அமைகின்றமையானும் தோழி தலைவன், த்லைவிக்கு அடங்கியவளேயாதலானும் அவள் வெளிப்படையாக அவன் செயலைக் குறை கூறமுடியாது. பழங்காலப் புலவர்கள் இந்நிலைகளிலே தான் உள்ளுறை, இறைச்சி என்பவற்றை எடுத்தாண்டார்கள். எனவே, இந்த உவமம் தவறியவரைத் திருத்தவும் பயன்படுகிறது என்பதை உணரல் வேண்டும். மற்றும் அறிவறிந்த தலைவன் அதைக் கேட்டுத் திருந்திவிடுகிறான் என்பதையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. எனவே, உவமை வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யப் பயன்படுகின்றது. இந்த உவமையில் பல வகை உண்டு என்றேனல்லவா? அவற்றுள் இரண்டொன்று காணலாம். திருக்குறள் முதற் பாட்டு, அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு." என்பது. இஃது உவமையின்பாற்பட்டது. எழுத்தெல் லாம் அகரத்தை முதலாக உடையன (அது போல) உலகம் ஆண்டவனை முதலாக உடையது," என்பது இதன் பொருள். இப்பாட்டில் உவமையை விளக்கும், போல’ உருபு இல்லை. முன்னே நாம் பார்த்தபடி இதைத் தொகை யாகவோ அல்லது லழுவமைதியாகவோ கொள்ளலாமா என எண்ணத் தோன்றும் சிலருக்கு. என்றாலும், இதை அந்த வகையில் சேர்ப்பதில்லை. அது சொற்றொடருக்கு அமைந்த இலக்கணமே அல்லாது பாட்டுக்கு அமைந்ததன்று. எனவே, இதை எடுத்துக்காட்டு உவமை என்பார்கள். இப் படியே ஐய உவமை, விபரீத உவமை, மாலை உவமை, இல் பொருள் உவமையென்று பலப்பல கூறுவார்கள். இவற் றுக்குத் தண்டியலங்காரம் நல்ல விளக்கம் தருகின்றது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/130&oldid=775057" இலிருந்து மீள்விக்கப்பட்டது