பக்கம்:நல்ல தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியும் தேவை 125 எனவே, இந்த உவமை இலக்கணத்தின் தன்மை அறிந்து தேவையான அளவுக்கு இடம் கருதி இதை எடுத்தாண்டு, நல்லதமிழ் எழுதுவது நலம் பயப்பதாகும். தொல்காப்பியர் இவ்வுவமை அணி எந்தெந்த வகையில் தோன்றும் என்பதைக் காட்டுவர். உவமானப் பொருளை மட்டும் எடுத்துக்காட்டி அது விளக்கவரும் உவமேயத்தைக் காட்டாவிட்டாலும் அந்தப் பொருள்களை உணர முடியும் என்கின்றார் அவர். நுனிக்கொம்பர் ஏறினார் அ.திறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகிவிடும்’ என்பது குறள் (476) இதில் வள்ளுவர் உவமானத்தை மட்டும் காட்டுகிறார், மரத்தில் ஏறும் ஒருவன் பெருங் கிளையின் கோடி வரையில் சென்று, அதன் சிறு கிளைகளையும் கடந்து சிறு கொம்பினை யும் தாவிக் கடப்பானாயின் அவன் விழுந்து இறக்கத்தானே வேண்டும். இதை மட்டும் தான் வள்ளுவர் சொல்லுகிறார். ஆனால் சொல்ல வந்த பொருள் வேறு. ஒருவன் தன் நிலை, தகுதி முதலியவற்றின் எல்லையைக் கடந்து ஏதேனும் செய் யத் தொடங்குவனாயின் அவன் வாழ்வு கெடும் என்பதை உணர்த்துகிறார். இதனால் 'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்று உடனேயே வெளிப்படையாகவே காட்டுகிறார் அல்லவா? அகப்பொருள் இலக்கணத்தில் உள்ளுறை உவமம் இறைச் சிப் பொருள் என்பன போன்ற பல உவம நிலைக்களங்கள் நன்கு காட்டப் பெறுகின்றன. கொண்டவன் தன் மனைவியை விட்டுப் பரத்தையர் வீட்டை நாடித் திரிந்து கெடுகின்றான். அவனைத் திருத்த நினைத்த புலவர் பலர். அவனோ பல வகையில் உயர்ந்த வன். வெளிப்படையாக அவன் செயலைக் கூறமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/129&oldid=775053" இலிருந்து மீள்விக்கப்பட்டது