பக்கம்:நல்ல தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நல்ல தமிழ் அத்தனையும் தேவையே இல்லை. காணாத ஒன்றைக் காவடுவது மட்டுமன்றி அகப்பொருள் நிலையில் - காதல் வாழ்வில் - சில இடங்களில் கற்பனையும் சேர்ந்திருக்கும். கற்பனை ஓரளவு கலவாத வாழ்வு பயன்படாது என்பதை இன்றைய எழுத்தாளர்கள் அறிகிறார்கள். ஆனால், இவர் களது கற்பனை உண்மைப் பொருளின் எல்லையையும் மீறி, எது பொருள் எது கற்பனை என அறியமுடியாதபடி செய்து வருகின்றதுதான் தவறாக முடிகின்றது. இரண்டும் இலக்கி யத்தில் வாழும் என்ற உண்மையைத் தொல்காப்பியர், 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (பொருள், 50) என்ற அடிகளால் விளக்கினார். எனவே, அந்த நாடக வழக்காகிய கற்பனைக்கும் உவமை ஓரளவு பயன்படும் என் பதை உணர வேண்டும். ஆனால், அந்தக் கற்பனையும் அதை ஒட்டி எழும் உவமம், உள்ளுறை யுவமம் போன்றன வெல்லாம் அகப்பொருள் பற்றி வரும் எனக் கருதியே அவை பற்றிய சூத்திரங்களை அகத்திணையியலில் அமைத்துள்ளார். ஆகவே, கருத்தொருமித்த காதல் வாழ்வுக்கு அவை ஒரளவு பயன்படும் என்பது உண்மை. சங்க இவக்கியங்களிலே இந்த உவமைகளை அகத்திலும் புறத்திலும் பலப்பல இடங்களில் காண்கின்றோம் புலவர் சிலரின் இயற்பெயர்கள் மறந்துவிட்டாலும், அவர்கள் கூறிய உவமைகளாலேயே பெயர் பெற்று வாழ்கின்றார்கள், செம் புலப் பெயல் நீரார்', 'தேய்புரிப் பழங் கயிற்றார் போன்ற பெயர்கள் அப்படிப்பட்டனவே. எனவே, உவமை இலக்கி யத்துக்குத் தேவை. பெரும்பாலும் கற்பனை கலந்த இவ் வுவமை செய்யுளில் இடம் பெறும். எனினும், நாம் முதலிற் கண்டபடி கற்பனை கலவாது பொருளை விளக்க வேண்டி வரும் உவமைகள் சாதாரண உரைநடையிலும்வருவது உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/128&oldid=775051" இலிருந்து மீள்விக்கப்பட்டது