பக்கம்:நல்ல தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியும் தேவை 123 அற்றன என்னும் உண்மை, அந்த அலங்கார நூல்கள் மெல்ல மெல்ல வழக்கிலிருந்து மறைந்துகொண்டு போவதிலிருந்தே விளங்குகின்றதல்லவா! உவமையொடு தொடர்புடைய உரு வகம் போன்ற ஒரு சில அணிகள் மட்டுமேயன்றி, பிறவற்றின் பெயர்களும் புலவர்களுக்கே தெரியா. தெரியும் ஒரு சிலவும், பள்ளிப் பிள்ளைகளின் தேர்வுக்காகவே பயன்படுத்தப்படுகின் றன. முன்பு யாப்பில் கண்டபடி, தத்தம் மனம்போலப் பலர் இடைக்காலத்தில் பல வகையான பாடல்களைப் பாடித் தம் மனம் போன போக்கில் யாப்பும் அணியும் அமைத்தனர். எனவே, அவை பற்றிய இலக்கண நூல்கள் எழுந்தன எனி னும், அப்பாடல்கள் கால வெள்ளத்தை நீந்தாது, வெள்ளத் தோடே அடித்துப் போகப்பட்டமையால், அவற்றின் இலக் கணங்களும் மறையத் தொடங்விட்டன. நாம் இங்கு நல்ல தமிழை உருவாக்க உதவும் இரண்டோர் அணிகளைக் கண்டு அமைவோம். . - தண்டியலங்காரக் காலத்தில் காப்பியங்களைப் பற்றி யெல்லாம் இலக்கணம் கூறவேண்டிய நியதி உண்டாயிற்று. எனவே, அதன் ஆசிரியர் அவற்றையெல்லாம் அடக்கிப் பொதுவணி இயல் செய்தார். பின்னரே பொருள் நலம் கானும் வகையில் முப்பத்தைந்து அணிகளை வகுத்தார். ஒரு சிலவற்றைப் பலப்பல வகையில் பிரித்து வைத்தார். சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பின், அனைத்தும் தொல் காப்பியர் கூறுகின்ற உவமை அணியினுள் அடங்கும் என்பது நன்றாக விளங்கும். தொல்காப்பியர், வினை, பயன், மெய், உரு என்ற நான்கு அடியாக உவமை பிறக்கும் என்று கூறி அமைந்தார். தண்டி அலங்காரத்திலோ, 24 வகையாக அந்த உவமை அணி பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் காரணம் காட்டி விளக்குவார் ஆசிரியர். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/127&oldid=775049" இலிருந்து மீள்விக்கப்பட்டது