பக்கம்:நல்ல தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நல்ல தமிழ் வில் வந்துவிட்டது. ஏதோ ஒன்றை ஒருவன் புதிதாகக் கண்டதாகக் குறித்திருப்பான். அதிலிருந்து கேட்டவனுக்கு ஒரு வேளை அது விளங்காது இருந்திருக்கும். எனவே, முன் னவன் அங்கே இருவருக்கும் அறிமுகமான தெரிந்த மற்றொரு பொருளைக் காட்டி, அப்பொருள் இப்படி இருக் கும், எனக் காட்டியிருப்பான். இவ்வாறு மொழி தோன்று முன்னே உவமை தோன்றிவிட்டது. மொழிக்கு இவ்வுவமை எவ்வளவு அவசியம் என்பதை முன்னமே கண்டோம் அல்ல оит? தொல்காப்பியர் செய்யுளிலும் உரை நடையிலும் காட்டவிழைந்த பொருளை விளக்குவதற்குத்தான் உவமை யைக் கையாண்டார். எனினும், பின் வந்த பலர், யாப்பி லக்கணத்திலே எத்தனையோ புதுப்புது மாறுபாடுகளைச் செய்தமை போன்றே இந்த இலக்கணத்திலும் செய்துவிட்ட னர். அணியிலக்கணம் என்றே பெருநூல் எழுந்து விட்டது. தொல்காப்பியர் பொருளின் சிறப்பை எல்லாம் அகத்திலும் புறத்திலும், களவிலும், கற்பிலும் நன்கு காட்டிப் பின் சொல் லாதவற்றையெல்லாம் பொருளியலிலும் காட்டி, அம்மக்கள் வாழ்வில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பின் ஓர் இயலில் காட்டி, அவர்தம் உலக வழக்குக்கும் செய்யுள் வழக்குக்கும் உவமம் எந்த அளவில் உதவுகின்றது என்பதையே தம் உவம இயலில் காட்டுகின்றார். (பின்னர்ச் செய்யுளும் மரபும் அமைகின்றன.) உவமம் இன்னது என்றே விளக்கத் தேவை இல்லாமையினால் அதை விட்டு, அந்த உவம மரபு மக்கள் வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதை மட்டும் சுட்டிக் காட்டினார். பின்னர் அந்த ஒர் உவமையை வைத்துக் கொண்டே 'தன்மை முதல் பாவிகம் ஈறாக, நாற்பதுக்கு மேல் தொகுத்து அவற்றைப் பல நூறாக வகுத்துப் பிரித்தனர் பின்னையவர். இவை அனைத்தும் தேவையா என்று எண்ண வேண்டியுன்ளது. இவை தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/126&oldid=775047" இலிருந்து மீள்விக்கப்பட்டது