பக்கம்:நல்ல தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தும் ஒலியும் 19 -سي-**ہ பொருள்களை உணர்த்த முடிகின்றது என்ற கூண்மை புல னாகுங். எனவே, எழுத்து வழக்கில் 'ஐ', 'ஒள' என்ற இரண்டுய் அப்படியே வழங்கப் பெறவேண்டும். இவை இரண் டும் தனித்து எழுத்தாக நின்றே பொருளையும் தருகின் றனவே. அவ்வாறு அன்றிப் போலி'யாக அய்', 'அவ்' என வழங்கினும் இலக்கணம் தவறு என்று கொள்னார். ஐயர்' என்பதை அய்யர்' என்றும், ஒளவை' என்பதை அவ்வை' என்றும் இன்றும் எழுதுவதைக் காண்கிறோ மல்லவா? அந்த முறை தவறுடையது அன்று. தமிழ் எழுத்துக்களுக்கு ஒலியும் வடிவம் தனித்தனியர்க இன்னின்ன என்றும் வரையறுத்திருக்கிறார்கள், மற்றும் அந்த எழுத்துக்களின் ஒலி பிறக்கும் இலக்கணமும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த நிலை அறிந்து எழுத்து ஒலிகளை நாம் உச்சரிப்போமானால், பேச்சில் பிழை உண் டாகக் காரணமே இல்லை. உயிர் எழுத்துக்களுக்கும் மெய் எழுத்துக்களுக்கும் தனித்தனியாகப் பிறப்பிடம் கூறுகின்றார் நன்னூலார். மெய் எழுத்துக்கள் அவ்வாறு தம்முள் மரறிப் பிறப்பதாலேதான் வல்லினம், மெல்லினம், இடையினம்’ என்று மூன்று பிரிவுகளாக்கப்பட்டன. உயிரும் இடையினமும் கண்டத்தை இடமாகவும், மெல் எழுத்து மூக்கை இடமாக வும், வல்லெழுத்து மார்பை இடமாகவும் பெற்றுப் பிறக்கும் என்பது இலக்கணம். இவ்வாறு அவற்றின் பிறப்பிடம அறிந்ன எழுத்தை உச்சரித்தால் பேச்சுத் தமிழில் பிழையே உண்டாகாது. மார்பிலிருந்து கிளம்ப வேண்டிய ஒலிக்குப் பதில் மூக்கிலிருந்து ஒலி உண்டானால் சீனாக்காரன்’ பேச்சு மாதிரிதான் இருக்கும். எனவே, நல்ல தமிழில் பேசு வதற்கு, எழுத்துக்களின் பிறப்பிடத்தை அறிந்து நாமும் அவ்வாறு பேசுதலே சிறந்தது. இங்கே நான் கூறியது பொது விதி. ஒவ்வோர் எழுத்தும் எவ்வெவ்வாறு பிறக்கிறது என் பதையும் அதற்கு வேண்டிய நா, உதடு, பல், அண்ணம் இவற்றின் முயற்சிகளையும் இலக்கண நூலோர் நன்றாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/23&oldid=775086" இலிருந்து மீள்விக்கப்பட்டது