பக்கம்:நல்ல தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நல்ல தமிழ் பகுத்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றையெல்லாம நாம் இங்கே விளக்க வேண்டா. பெரும்பாலும் மக்களது முயற்சி யில் அவை இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அப்படி அமையாத ஒரு சிலர்தாம் தவறாகப் பேசுகின்றனர். அந்தத் தவறே பேச்சு வழக்கை எழுத்து வழக்கிலிருந்து எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது. மேல் அண்ணத்தை வருட'ழ' பிறக்கும் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்கு முயற்சி வேண்டும். நாவை மேலே தூக்கி, மடித்துப் பின் மேல் வாயாகிய அண்ணத்தை வருட வேண்டும். இந்த முயற்சியைச் செய்யச் சிலர் சோம்பல் கொள்வது உண்டு. அப்போதுதான் வாழைப் பழம்', 'வாயப்பய’மாகவும் வாளப்பள'மாகவும் உருமாறி மொழியைச் சிதைக்கிறது. இந்தச் சோம்பல் நீங்கி, முயற்சி சரியாக உருப்பெறுேேமயானால், பேச்சு மொழி நன்றாக அமையும். இவ்வாறே பல எழுத்துக்களின் பிறப்பிடம் அறியாத காரணத்தாலோ - அறிந்தும் முயலாத காரணத் தாலோதான் பிழைபடப் பேசும் நிலையும், அதனால் மொழி யின் நிலையே மாறும் வகையும் உண்டாகின்றன. மனிதனு டைய சாதாரணமான சோம்பல் - வாயசைக்கவும் வருத் இப்படும் சோம்பல் - மொழியின் வரலாற்றையே மாற்றி விடுகிறது என்பதை அவர்கள் அறிவார்களானால் நிச்சயம் அவர்கள் சோம்பல் அடைய மாட்டார்கள். இனி, எழுத்துக்களின் அமைப்பு நல்ல தமிழ் எழுத உதவும் நிலையைக் காண்போம். பேச்சு வழக்கில் மனித னின் சோம்பல் பெரிதும் இடம் பெற்றாலும், இன்னும் எழுத்து வழக்கில் அந்தப் பெரு நிலை ೧೮೧೯ು೧೧ು. எழுத்துக்களை ஒழுங்காகவே பலர் எழுதுகின்றனர். 167 றாலும் ஒரு சிலர் எழுதுவதைப் பார்த்தால் அஞ்சி ಡಿರ್ಮಿತಃ।। யுள்ளது. காஞ்ஜிபுரம்', 'பஞ்ஜி போன்ற சொற்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/24&oldid=775088" இலிருந்து மீள்விக்கப்பட்டது