பக்கம்:நல்ல தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தும் ஒளியும் 21 சிலர் எழுதுவதைப் பார்க்கிறோம். அது கண்டு நல்ல தமிழ் விரும்பும் உள்ளம் வருந்துகின்றது. தமிழில் சில ஒலிகளைக் குறிக்க எழுத்துக்கள் இல்லை என்றும், ஆகவேதான் இவ்வாறு எழுத நேரிடுகிறது ೯. றும் ஒரு.சிலர் வாதிடவும் செய்கின்றனர், ஆழ்ந்து பார்த் தால், அந்த வாதத்துக்கு வழியே இல்லை. வல்லினம் மெல்லினம் என்ற இரு பிரிவை நாம் மேலே கண்டபடி ஒலி பிறக்கும் இடம் பற்றி மட்டும் அமைக்கவில்லை. அவை மொழிக்கு வேண்டிய ஒலிகளை அமைக்கும் வகையிலேயும் அந்தப் பகுப்பு அமைந்துள்ளது. 'க'வ்வுக்கு, 1ங் வவும், 'ச'வ்வுக்கு ஞ'வ்வும், ட'வ்வுக்கு ண'வ்வும், தவ்வுக்கு 'ந'வ்வும், ப'வ்வுக்கு ம'வ்வும், 'ற'வ்வுக்கு ன'வ்வும் ஒட்டிய இனங்களாகவே அமைக்கப் பெற்றுள்ளன. இந்த உண்மை உணர்ந்து கொண்டால் தமிழில் உண்டாகும் பல பிழைகளை எளிதில் நீக்கிவிடலாம். அவற்றைப் பிறகு காணலாம், இங்கு ஒலி பற்றியல்லவா கண்டோம்? ஆம்! இந்த இன அமைப்பிலே ஒலி வகைகளுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. சுக்கு என்ற சொல்லையும் சுங்கு' என்ற சொல்லையும் உச்சரித்துப் பாருங்கள் இரண்டிலும் கடைசியாக வரும் 'கு'வ்வின் ஒலியில் வேறுபாடு காண முடிகிறது அல்லவா? இந்த ஒலி வேறுபாடு எதனால் ஏற்பட்டது? 'கு'வ்வுக்கு முன் க் வந்தால் வல் ஒலியும், ங் வந்தால் அதனுடன் இணைந்த வேற்று மெல்லிய குழைவு ஒலியும் வருகின்றன அல்லவா? எனவே, 'க', தன் இன மெல்லெழுத்தோடு இணைந்தபோது ஒரு புது ஒலியை உண்டாக்கிக் தருகின்றது. இதே நிலை பஞ்சு, பண்டு, கன்று, பந்து, கம்பு' போன்ற வற்றில் காண முடியும். பஞ்சாட்சரம்' என்பதில் சர்' வுக்குப் பதில் ஜா போட வேண்டாமலே அந்த ஒலி இயல் பாகவே அமைவதைக் காண முடிகிறதன்றோ? இந்த உண்மையை இணராத காரணத்தாலேதான் பஞ்ஜி',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/25&oldid=775090" இலிருந்து மீள்விக்கப்பட்டது