பக்கம்:நல்ல தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்ல தமிழ் காஞ்ஜீபுரம்' என்றெல்லாம் பிழைபட எழுத வேண்டி யுள்ளது, இந்த உண்மையைத் திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் என்ற பெருநூல் எழுதிய கால்டுவெல் பெரு losgorstrf s56or sprra grapg) (Convertibility of surds and sonants) உள்ளார். இப்படியே எழுத்துக்களின் இனச் சேர்க்சையினாலே தேவையான புதுப்புது ஒலி அமைப்புக் களை ஆக்கும் முறையில் நல்ல தமிழில் எல்லாவற்றையும் எழுத முடியும். 'க, ங் போன்ற வல்லின மெல்லின இணைப்புக்களை அறிந்தால், பல பிழைகளை நீக்கலாம் எனக் கண்டோ மல்லவா? ஆம் அந்த இணைப்பு முறை ஒழுங்காகக் கையாளப் பெற்றால், தவறுகள் நீங்குவதோடு, எழுதும் மொழியும் நல்ல மொழியாக அமைந்துவிடும். சிலர் 'வன்து', 'செந்று', 'பண்றி போன்ற முறையில் சொற் களை எழுதுகின்றனர். இவை தவறு உடையவை என்பது நன்கு தெரிகின்றதே! இவை சாதாரணப் பள்ளிப் பிள்ளை களைக் கூடச் சிரிக்க வைக்கும் பிழைகள் அல்லவா? ஆம்: அப்படி இருந்தாலும், ஏன் இந்தப் பிழைகள் உண்டா கின்றன? எழுபவர்கள் இன எழுத்துக்களின் அமைப்பை உணர்ந்து கொள்ளாமையே இதற்கு முக்கிய காரணமாகும். 'து'வ்வுக்கு முன் அதன் இனமாகிய 'ந'வ்வும், 'று'வ்வுக்கு முன் அதன் இனமாகிய 'ண'வ்வும் வரும் என்ற அடிப் படையை நன்கு புரிந்து கொண்டால், இத்தகைய பிழை களை அறவே நீக்கிவிடலாம். இந்த உண்மை புரிந்து விட்டால் தமிழில் மூன்று ணகர, 'ந'கர, னகர ஒலி எழுத்துக்கள் ஏன் இருக்கின்றன என்ற கேள்வியே உண்டா காது அல்லவா? ஆம்! தமிழில் ஒரே ஒலியில் மூன்று எழுத்து களும், இரண்டு எழுத்துக்களும் இருப்பனவாக எண்ணினா லும், ஆராய்ந்து பார்த்தால், ஒலிக் குறிப்பும் அவை வழங்கும் இடமும் அமையும் முறையும் வழக்கும் நோக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/26&oldid=775092" இலிருந்து மீள்விக்கப்பட்டது