பக்கம்:நல்ல தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தும் ஒலியும் 23 سباستیاس வேறுபட்டே நிற்கும் என்பது நன்றாக விளங்குமமன்றோ! இந்த அடிப்படையைப் பற்றியே ஒரு பெருநூல் எழுதிவிட லாம். எனினும், விரிவு அஞ்சி நான் இந்த அளவோடு அமை கின்றேன். இனித் தமிழில் உள்ள எழுத்து முறையில் மற்றொன்றை யும் இங்கே கூறலாம் என எண்ணுகின்றேன். தமிழில் எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வாரா. அவ் வாறே எல்லா எழுத்துக்களும் மொழிக்குக் கடைசியில் வாரா. இடையிலும் எல்லா மெய் எழுத்தும் ஒன்றை ஒன்று இணைந்து வாரா. இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்வது கடினமன்று, சற்றுக் கூர்ந்து நினைத்துப் பார்த்தால் நன்றாக விளங்கிவிடும் சொல்லுக்கு முதலில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங் என்ற பத்து மெய் எழுத்துக்களும் வரும் மெய் எழுத்துக்கள் தாமாகவே முதலில் இடம் பெற இயலாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மெய் அல்லது உடம்பு தானே இயங்காது; அதில் உயிர் சேர்ந்த பிறகே அதன் இயக்கம் உண்டாகும். இது உலக இயற்கை. இதுவே எழுத்துக்களுக்கும் பொருந்தும். மெய் எழுத்தோடு உயிர் எழுத்துச் சேர்ந்தாற்றான் அதன் இயக்கம் தெரியும். எனவே, இங்கே மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துக் கள் என்பன, அவை உயிரோடு கூடிய உயிர்மெய் எழுத்துக் களேயாகும். ஒவ்வொரு மெய்யும் பன்னிரண்டு உயிர் களோடும் சேரும். அப்படியானால், இங்கே குறிப்பிட்ட மெய் எழுத்துக்கள் பத்தும் பன்னிரண்டு உயிர் எழுத்து களோடும் சேர்ந்தும் மொழிக்கு முதலாக வருமா என்ற ஐயம் ஏற்படுமல்லவா? ஆம்: அந்த ஐயத்தைப் போக்கு வதற்காகவே விளக்கமாகத் தொல்காப்பியரும் நன்னூலாரும் சில சூத்திரங்கள் இயற்றியுள்ளார்கள். அவை அனைத்தை யும் அறிய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/27&oldid=775094" இலிருந்து மீள்விக்கப்பட்டது