பக்கம்:நல்ல தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கல்ல. தமிழ் மேலே கூறிய பத்து மெய் எழுத்துக்களில் ஞ, ங் என்ற இரண்டும் இச்காலத்தில் மிகக் குறைந்தே மொழிக்கு முதலில் வருகின்றன. 'ங்' என்ற எழுத்துக்குச் சொல்லே இல்லை. அந்தக் காலத்தில் இரண்டொரு சொற்கள் இருந்திருக்க லாம் எ ன வே தா ன் எழுத்துக்களை வகைப்படுத்திய நன்னூலார். இவை இரண்டையும் வைப்பு முறையில் கடைசியில் வைத்தார். அதிலும் 'ங்'வ்வே இறுதியில் உள்ளது. க, த, ந, ப, ம என்ற ஐந்து மெய் எழுத்துக்களும் எல்லா உயிர் எழுத்துக்களுடனும் சேர்ந்து வரும்; பிற சிலவற்றெர்டு மட்டும் சேர்ந்து வரும். இவ்வாறு தமிழில் இன்னின்ன எழுத்துக்களே மொழிக்கு முதலாக வரக் கூடியன என்பதை அறியலாம். இன்று நாட்டில் பலரால் இந்த வரையறை கைக் கொள்ளப்படவில்லை என்பதைக் காண்கிறோம் அதனால், நல்ல தமிழ் நலிவுறுகின்றது. பிற நாட்டு மொழிகள் தமிழோடு கலக்கின்ற காரணத்தாலும் தமிழின் இந்த வரம்பு மீறப்படுகிறது. உதாரணமாக 'ர' என்ற எழுத்தைக் காண் போம். இவ்வெழுத்துத் தமிழில் மொழிக்கு முதலில் வாராது; ஆனால், இன்று ரப்பர், ராமன், ரம்பம் போன்ற பல சொற்களைக் காண்கிறோம். இவ்வாறே மொழிக்கு முதலில் வாராத 'ல’ என்ற எழுத்தை முதலாகக் கொண்டு லட்சுமி, லட்சுமணன், லட்சம் போன்ற சொற்கள் தமிழில் வழங்குவதைக் காண்கிறோம். இலக்கண முறையில் கண் டால் இவற்றைப் பிற மொழிச் சொற்கள் என்று திட்ட மாகச் சொல்லி விடலாம். இவ்வாறாய பிறமொழிச் சொற் களைச் சேர்ப்பதா அல்லது வேண்டாவா என்ற ஆராய்ச்சி நமக்கு இங்கு வேண்டா. ஆனால், தமிழர்தம் செல் விருந் தோம்பி வருவிருந்து. கானும் மனப்பான்மை தமிழ் எழுத்துக் களுக்கும் உண்டு. அவை அவ்வாறு தமிழில் வந்து வழங்கும் சொற்களை ஏற்றுத் தம் நிலைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும், இரப்பர், இராமன், இரம்பம், இலக்குமி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/28&oldid=775096" இலிருந்து மீள்விக்கப்பட்டது