பக்கம்:நல்ல தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தும் ஒலியும் 25 இலட்சுமணன், இலட்சம் என்று உயிர் எழுத்தை முதலிற் கொண்டு அவற்றைத் தமிழில் வழங்கலாம். இதுபோன்றே ரத்தினம் இரத்தினம் என்றும், லோகம் உலோகம் என்றும் மாற்றி வழங்கப் பெறுகின்றன. இந்த அமைப்புப் பற்றி பின் னர் வேண்டும்போது காணலாம். இவ்வாறு வழங்கும்போது அவை தமிழ் மரபை ஒட்டித் தமிழ் ஓசை கொண்டு தமிழா கவே மாறிவிடுகின்றன. இது இலக்கண நூலோர் கொன்நெறி. இவ்வாறு மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை எண்ணி அதன்படி எழுதின், அதுநல்ல தமிழாகவே அமையும். இனி, மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும் இவ்வாறு திட்டமாகக் கணக்கிட்டுள்ளனர். அவையும் எவ் வெவ்வாறு கடைசியில் வந்து வழங்கப்பெறும் என்றும், மெய் எழுத்துக்கள் எந்த உயிர்களோடு சேர்ந்து வரும் என்றும் இலக்கணம் காட்டியுள்ளார்கள் அப்படியே - * சொல்லின் இடையில் எவ்வெவ்வாறு மெய் எழுத்துக்கள் தம்முள் கலந்து மயங்கி வரும் என்பதையும் திட்டமாக வலியுறுத்தி யிருக்கிறார்கள், அவற்றை அறியாத காரணத்தாலேதான் பல சாதாரணப் பிழைகளும் உண்டாகின்றன 'முயற்ச்சி பயிற்ச்சி, பற்ப்பொடி' எனச் சிலர் இயையா மெய்களை இயைத்து எழுதுவதைக் காண்கிறோம். இது தவறு என்பது நன்கு தெரிகிறதல்லவா! ற் என்பதை அடுத்து மற்றொரு வல்லினமெய் வாராது என்பதைத் திட்டமாக அறிந்தால் இப்படி எழுதுவோமா? இப்படியே சில எழுத்துக்களை அறியாது பயன்படுத்துகின்றோம். 'போல்ச் சொன்னான் வேல்க் குத்தினான்’ என்பன போன்ற தொடர்களையும் எழுதுகிறோம். இவை இடையில் வழங்கும் எழுத்துக் களைப் பற்றி அறியாமையினால் வரும் பிழைகளே. இவை களை யெல்லாம் நீக்கத் திட்டமான இலக்கண வரம்பு தமிழில் உண்டு. தொல்காப்பியரும், பவணந்தியாரும் அவற்றைச் சூத்திரங்களாக எழுதி வைத்து விட்டார்கள். இன்று பலர் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/29&oldid=775098" இலிருந்து மீள்விக்கப்பட்டது