பக்கம்:நல்ல தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நல்ல தமிழ் அவற்றை விளக்கமாக உர்ை நடையில் எழுதி வருகிறார்கள். அவற்றைப் பார்த்துச் சாதாரணமான பிழைகளையெல்லாம் திருத்திக்கொள்ளலாம். மற்றும் இவையெல்லாம் சொல்ல வும் எழுதவும் பழக்கத்தில் வருவனவே. அதனாலேதான். "செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற கூற்று எழுந்தது. பல முறை சொல்லியும் எழுதியும் பழகின், பல பிழைகள் நம்மை அறியாமலே நம்மை விட்டு நீங்கிவிடும். இவ்வாறு மொழி யின் அடிப்படையாகிய எழுத்துக்களையும், அவற்றின் அமைப்பு முதலியவற்றையும், அவை எவ்வெவ்வாறு சொற் களில் அமைக்கப்பெறும் என்பன போன்ற நிலைகளையும் ஒரளவு அறிந்துகொண்டாலும், நல்ல தமிழ் எழுதப் பழகி விடலாம். எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நியதி இல்லை; அது முடியாததுங்கூட. எனவே, இவற்றில் அடிப்படையாக உள்ள சிலவற்றை மட்டும் அறிதலே போதும்; நல்ல தமிழ் பழக்கமாகிவிடும். அதற்கு உரிய வழிகளை நன்றாகக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/30&oldid=775102" இலிருந்து மீள்விக்கப்பட்டது