பக்கம்:நல்ல தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சொற்களின் அமைப்பு தமிழ் எழுத்துக்களின் அமைப்பைப் பற்றியும் அவற் றின் உச்சரிப்பு முதலியன பற்றியும் எழுத்துக்களின் சேர்க்கை யினால் உண்டாகின்ற ஒலி மாறும் நுணுக்கங்களைப் பற்றி யும் முன் ஒருவாறு பார்த்தோ மல்லவா! அந்த எழுத்துக் களைப் பற்றி இன்று நாட்டில் பேசப்பெறும் இரண்டொன் றைப் பற்றிக் கண்டு மேலே செல்லலாம். - தமிழில் எழுத்துக்கள் அதிகம் என்றும், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றும் சிலர் கூறு கின்றனர். தட்டெழுத்துப் (Type writing) போன்ற சாதனங் களுக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டு மென்றும் சிலர் சொல்லுகின்றனர். உலக மொழியாகிய ஆங்கிலத்திற்கு இருபத்தாறு எழுத்துக்கள் இருப்பது போன்று தமிழுக்கும் எழுத்தைக் குறைக்கலாம்:என்று எடுத்துக்காட்டி விளக்குவர். அவர்கள் சொல்லும் வாதங்களிலெல்லாம் ஒரளவு உண்மை இருப்பது போலத் தெரிந்தாலும், அவர்கள் காட்டுவது போன்று தமிழில் எழுத்துக்கள் அத்தனை அதிக மாக இல்லையே! தமிழில் உள்ள எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை முப்பதுதான். 'எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃது என்ப.” எனத் தொல்காப்பியம் திட்டமாக வரையறுத்துக் கூறுகின் றது. அதையே நன்னூலார் 'உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே' (59) எனக் காட்டுகிறார். இந்த முப்பதுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/31&oldid=775103" இலிருந்து மீள்விக்கப்பட்டது