பக்கம்:நல்ல தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 35 எழுதவும் இயலும் என அறிதல் வேண்டும். பெயர்ச்சொல் பற்றி அறிய வேண்டிய வேறு சிலவற்றைப் பற்றிப் பின்னால் தேவைப்படும்போது அறிந்து கொள்ளலாம். இனி வினைச் சொல்லைப் பற்றிக் காண்போம். வினைச்சொல்லே மொழிக்கு முக்கியமாகும். l_16.) வினைகளின் முடிவுகளே மொழிகளைப் பற்றிய வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. இவ் வினைச்சொல், முன் பெயர்ச் சொல்லுக்கு காட்டிய இலக்கணங்களைக் கொண்டது திணையும், பாலும், எண்ணும், இடமும் வினைக்கும் உண்டு. ஆனால், வினைச்சொல் வேற்றுமையை ஏற்றுக்கொள்ளாது: அதற்குப் பதிலாகக் காலம் காட்டும். இறந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களைக் காட்டுவது வினையேயாகும். ஆம்; உலகமே இந்த முக்கால எல்லையில் தானே அமைகின்றது. பெயர்ச் சொல்லாகிய எழு வாயைச் சொல்லாமல், வினைச்சொல்லை மட்டும் குறித்தாலும், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள இயலும். வந்தேன்’ என்பது வினைச்சொல் நான் என்ற எழுவாயைச் சேர்க்கா விட்டாலும் இது தன்மையில் ஒருமையைக் காட்டுகிறதல் லவா? வந்தாள்’ என்பதில் படர்க்கை, உயர்திணை, பெண் பால், ஒருமை. இறந்த காலம் இத்தனையும் விளங்குகின்றன அல்லவா? அவள் என்ற எழுவாய் மறைந்திருந்தாலும், வினை முடிபு அவளையும் காட்டி அவள் செயலுக்கு உரிய அனைத்தையும் காட்டுகிறது. ஆனால், அவள்” என்ற பெயர்ச்சொல்லை மட்டும் குறித்தால் அவள் என்னானாள்? என்ற வினாவிற்கு விடை கண்டே ஆகவேண்டுமல்லவா? எனவே, வினையே மொழிக்கு அடிப்படையாகின்றது. தமிழில் இலக்கணம் அமைத்த பெரியவர்கள் தம் வாழ்வை ஒட்டியே அவ்விலக்கண அமைதியையும் போக்கை யும் சொல்லாக்கங்களையும் அமைத்தார்கள் என்று கொள்ள லாம். எழுத்துக்கள் மொழிக்கு அடிப்படை. அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/39&oldid=775119" இலிருந்து மீள்விக்கப்பட்டது