பக்கம்:நல்ல தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நல்ல தமிழ் மூன்று இடங்களும் உண்டல்லவா? இவற்றை எல்லாம் சீ சொல்லே விளக்கிவிடும். ஆண் பெண் எனப் பிரிக்க முடி யாத சிலதொகைச் சொற்களைப் பொதுவாகவே சொல்வர். ‘மக்சுள் என்ற சொல் அதற்கு உதாரணமாகும், இவற்றோடு வேற்றுமை உருபுகள் கலந்து பொருளை வேற்றுமை செய். வதே வேற்றுமை, அவற்றையெல்லாம் தனித்தனியாக விளக்கவேண்டாமெனக் கருதுகின்றேன். உதாரணத்துக்கு ஒன்று காட்டிச் செல்லலாம் மாணவன் நூலை எடுத்தான்' என்ற வாக்கியத்தில், மாணவன் நூலை என்ற இரண்டு பெயர்ச்சொற்கள் வருகின்றன, மாணவன்' என்ற சொல் லில் வேறுபாடு இல்லை. நூல்' என்ற பெயர்ச்சொல்லை நூலை என்று செயப்படுபொருளாக உபயோகிப்பதற்கு 'ஐ' என்ற ஓர் உருபு பயன்பட்டது. செயல் செய்யும் மனிதன் எழுவாயாகிறான். எடுத் தான் என்பது அவன் தொழிற்படும் பயனிலை, எடுக்கப்பட்டது நூல் ஆம் இந்தச் செயப்படு பொருளை விளக்க வருவது ஐ என்ற வேற்றுமை உருபு. இதை இரண்டாம் வேற்றுமை என்பர். நூலின் பொருளை வேறுபடுத்தியதால் இது வே ற் று ைம யா யி ற் று. இந்த உதாரணம் வழியாக நாம் மற்றொன்றும் அறிந்து கொண்டோம். அது தா ன் சாதாரணமாகப் பள்ளிப் பிள்ளைகள் தொடக்கத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று ஒரு வாக்கியத்தில் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் அறிவது. இவற்றைப் பிரித்து அறிந்து கொள்ள ஒருவன் கற்றுக்கொண்டானானால், அவன் எந்த நூலையும் எடுத்து நன்றாகப் படித்துப் பொருள் கண்டு கொள்வான். எனவே, இது மிக முக்கியமாகும். செய்பவன் எழுவாய். இந்த எழுவாயை முதல் வேற்றுமை என்றும் கூறு வார்கள். அவன் செய்யும் வினையே பயனிலை. அவனால் செய்யப்படும் பொருளே செயப்படுபொருள் இம்மூன்றுமே வாக்கியங்களில் வருவன. சில வாக்கியங்களில் செயப்படு பொருள் இராது. எனவே, இம்மூன்றையும் முறையாகப் பிரித்து அறியக் கற்றுக்கொண்டால் நல்ல தமிழில் பேசவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/38&oldid=775117" இலிருந்து மீள்விக்கப்பட்டது