பக்கம்:நல்ல தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 33 யையும், செயல், வாழ்வு, வகை இன்ன பிறவற்றையும் நன்றாக உணர்ந்துகொள்ள முடியும் பெயர்ச்சொல் என்பது திணை, பால், எண், இடம் இவைகளைக் குறிக்கப் பயன் படும். ஒரு சொல்-பெயர்ச்சொல்- கூறின், அது கொண்டு அது உணர்த்தும் பொருளை அறிந்துகொள்ள முடியும். 'மனிதன்' என்ற ஒரு பெயர்ச்சொல் அச்சொல்லுக்கு உரிய வன் ஒருவன் என்பதையும், ஒருமையையும், படர்க்கை இடத்தையும் குறிக்கும் இந்த 'மனிதன்' என்ற சொல்லின் பொருளைச் சில எழுத்துக்களோ அன்றி ஓர் எழுத்தோ அத னுடன் சேர்ந்து ஓரளவு வேறுபடுத்தும். அவ்வாறு வேறு படுத்த வரும் எழுத்துக்களை வேற்றுமை உருபுகள் எனவே வழங்குவர். எனவே, பெயர்ச்சொல் என்பது, திணை, பால், எண், இடம், வேற்றுமைகளைக் கொண்டு வரும் என அறிய வேண்டும். திணை என்பது உயிரினத்தின் பிரிவு. இந்தப் பிரிவைப் பழங்காலத்தில் தமிழர் நன்றாக ஆராய்ந்து பிரித்துள்ளார் கள். உயிர்களுக்கு ஆறுவகை அறிவு உண்டு என்றும், ஆறாவது அறிவே நல்லதையும் தீயதையும் அறியும் பகுத் தறிவு என்றும் அறிவோம். ஆம்! அந்தப் பகுத்தறிவை உடைய உயிர்களே உயர் திணை. அந்த உணர்வு மக்கள் எனப்படும் புலன் உணர்வோடு பகுத்தறிவும் பெற்றவர் களுக்கே உண்டு; இதனாலேதான் தொல்காப்பியர் உயர் திணை என்மனார் மக்கட் சுட்டே (484) என்றார். இந்தப் பகுத்தறிவு அற்றவர் மனிதராயினும், அவர் அஃறிணையிலே சார்த்தி எண்ணப்படுவர். உயிருள்ள உயிரற்ற பிற பொருள் கள் அனைத்தும் அஃறிணைகளே. எனவே, சொல்லின் எடுத்துக்காட்டு வழியிலேயே நலம் நிறைந்த அறிவுக்கு உயர்வு காட்டிவிட்டார்கள் தமிழ் இலக்கணப் புலவர்கள். இனி அந்த உயர்திணையில் ஆண், பெண் வேறுபாடும் ஒருமை பன்மை வேறுபாடும் உண்டல்லவா? அன்றியும் சொல்லுவோன், கேட்போன், சொல்லப்படுவோன் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/37&oldid=775115" இலிருந்து மீள்விக்கப்பட்டது