பக்கம்:நல்ல தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நல்ல தமிழ் அமைப்பை நன்றாக ஆராய்கின்றார். அவற்றுள் இரண் டொரு முறைகள் சிலர் கருத்துக்கு மாறுபட்டனவாகக் காணி னும், அம்முறைப்படி செய்த ஆராய்ச்சியை உலகம் என்றும் போற்றும் என்பது உறுதி. அவ்வாறு சொற்களையும் அவற் றின் பொருள் நலத்தையும் அப்பொருள் பயக்கும் வேர்ச் சொற்களையும் கொண்டுதான் சொற்களை இன்னின்ன மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனப் பிரிக்கின்றனர். எனவே, சொற்களின் அடிப்படையே மொழி ஆராய்ச்சிக்கு முக்கியமானது. இச்சொற்களைத் தமிழில் யுள்ளனர் என்றாலும், இரண்டாகவே அடங்கும். யர், நான்காக வகைப்படுத்தி ஆராய்ந்து பார்த்தால் இவை அதனாலேதான் தொல்காப்பி சொல்லெனப் படுப பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே.” (642) என்று இரண்டாக்கிப் பின், இடைச்சொற் கிளவியும் உரிச்செற் கிளவியும் அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப (833) எனப் பெயரையும் வினையையும் சார்ந்து வரும் இடைச் சொல்லையும் உரிச்சொல்லையும் சேர்த்தனர். எனவே தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற இரண்டுமே அடிப்படை இவற்றைச் சார்ந்து பிற சொற்கள் வழக்கத் தில் வரும் என அறிந்து கொள்ளல் வேண்டும். தமிழில் வழங்கும் இந்தப் பெயர்ச் சொற்கள் எதை எதைக் குறிக்க வருகின்றன என்பதை அறிந்துகொண்டால் இவற்றை நன்றாக வாக்கியங்களில் பயன்படுத்த முடியும். பெயரையும் வினையையும் கொண்டு ஒரு பொருளின் தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/36&oldid=775113" இலிருந்து மீள்விக்கப்பட்டது