பக்கம்:நல்ல தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 31 அந்த எழுத்துக்கள் தனியாகவும் தொடர்ந்தும் சொற்களா கின்றன என்பதையே காணல் வேண்டும். தமிழ் எழுத்துக் களால் தொடர்ந்து எழுதப்படுகின்ற எதையும் சொல் என்று' சொல்ல முடியாது. சொல் என்பதற்கு இலக்கணம் கூறு கின்றவர்கள் அது பொருள் தரவேண்டிய ஒன்றாகும் என்பர். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, (639) என்பது தொல்காப்பியம். ஒர் எழுத்தே தனித்து நின்று பொருள் தருமாயின், அதுவும் சொல்லாகும். 'பூ' என்பது ஒர் எழுத்து இது மலர் என்று பொருள்படுகிறது. எனவே, இது சொல்லே சலசல' என்ற ஒலியைக் குறிக்க வரும் நான்கு எழுத்துக் கூட்டம் ஒரு பொருளையும் முடிந்த முடி பாகத் தரவில்லை. எனவே, அது சொல்லாகாது. இவ்வாறு வருவனவற்றை ஒலிக்குறிப்பு, அசை எனப் பல வகையில் பிரித்து வைக்கலாம். ஆனால், அவை சொல்லாகா. எனவே, சொல் என்பது ஏதாவது முற்றிய பொருளைத் தர வேண்டுமென்பதும், அச்சொல் தனி எழுத்தாலும், சில பல எழுத்துக்களாலும் ஆக்கப் பெறும் என்பதும் நன்கு தெரி, கின்றன. இனி அச்சொற்களின் அமைதியையும், வகைகளை யும் காணலாம். சொற்கள் உலகப் பொருள்களின் நிலையை விளக்கவும், உள்ளத்து உணர்வை வெளிக்காட்டுவதற்கும் பயன்படு கின்றன. உலகில் எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன. உயிரற்ற மேசை, நாற்காலி போன்ற பொருள்களும் உள் ளன. இவ்வுயிர்ப் பொருள்களையும் பிறவற்றையும் விளக்கிக் காட்டப் பயன்படுவனவே சொற்களாகும், இச்சொற்களை ஏன் எவ்வாறு உண்டாக்கினார்கள் என்பதை நம்மால் இன்று அறிய முடியாவிட்டாலும், எல்லாம் காரணங்களின் அடிப்படையிலேதான் உண்டாயின என்பதை ஆராய்ச்சி யாளர்கள் விளக்கிக் காட்டுகிறார்கள். கால்டுவெல் என்ற மேலை நாட்டு அறிஞர், தமது ஒப்பியல் மொழி நூலில் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்ணுப் பெயர்களின் தோற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/35&oldid=775111" இலிருந்து மீள்விக்கப்பட்டது