பக்கம்:நல்ல தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நல்ல தமிழ் இனி, இவ்வெழுத்துக்களில் அ, ஆ, இ, ஈ என்ற உயி ரெழுத்துக்களில் ஐந்தின் வகையினையும் குறிலை மட்டும் கொண்டு நெடிலுக்குப் பொதுவாக ஒரு குறியிடு கொள்ள லாமே என்பர் சிலர். அது தட்டெழுத்துக்குச் சாதகமாகும் என்பர். இன்னும் சிலர் வேறு வகை மாற்றங்களை விரும்பு வர். எனவே அவையெல்லாம் காலத்துக்கு ஏற்ற, சமயத்து கேற்ற வாழ்வாக அமையுமே தவிர, திண்ணிய முடிவா காது. பிற மொழிகளைக் கண்டு ஒரு சிலர் இத்தகைய மாற்றங்களைக் கொள்ள நினைத்தால் அது தவறாகும், தமிழின் தனித்தன்மை இந்த நெடுங்கணக்கு என்ற எழுத் தமைப்பு முறையிலேயே உள்ளது. எந்த மொழியிலாவது எழுத்துக்கு 'கணக்கு அதிலும் 'நெடுங் கணக்கு” என்ற பெயர் உண்டா என எண்ணிப் பார்க்கவேண்டும், தமிழைக் காட்டி லும் அதிக எழுத்துக்களை உடைய வடமொழி உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் போற்றப்படுகிறதே. இனி, இந்த எழுத்துக்களால் ஆக்கப் பெறும் சொற் களைப் பற்றிக் காணலாம். மொழி சொற்களால் ஆக்கப் பெறுவது. வெற்று ஒலி அளவாக அமைந்த எழுத்துக்கள் அந்த அளவிலேயே வரி வடிவம் பெறாது அமைந்து விடுமே யானால், அவை வெறும் பேச்சு வழக்கில் உள்ள திருந்தாத மொழிகள் எனக்கொள்வர். அப்பேச்சு வழக்கில் உள்ள் ஒலிக் கூட்டங்கள் எழுத்தில் வரி வடிவம் பெற்ற பிறகுதான் ஒரு மொழியைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடியும். பேச்சு வழக்கில் மட்டும் இருந்தால். ஒரே சொல்லைப் பல் வேறு வகையில் பலர் உச்சரிக்கக்கூடும். அப்போது அதன் உண்மை இயல்பு நன்றாகத் தெரியாது. என்று தோன்றிற்று என அறியலாகாத தமிழ் வரி வடிவம் பழைய இலக்கண மாகிய தொல்காப்பியத்தில் கண்ட வகையிலேதான் அமைந் திருக்கிறது. இரண்டோ ரெழுத்துக்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். அவற்றை முன்னமே காட்டியிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/34&oldid=775109" இலிருந்து மீள்விக்கப்பட்டது