பக்கம்:நல்ல தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 29 துக்கள் இருந்தும் உச்சரிக்கப்படாமல் விடப்பெறுகின்றன. 'Coffee என்ற சொல் Kofi, என்ற ஒலியில் பேசப்பெறு ஒன்றது. One' என்ற சொல் 'Won' என்ற வகையில் ஒலிக்கப் பெறுகின்றது. "Edge' என்ற சொல் ei என்று உச்சரிக்கப்பெறுகின்றது: "Educate என்ற சொல்லில் : யின் ஒலி மாறுபடுவதைக் காண்கின்றோம் Bபt', 'Put’, 'Cut’-இம்மூன்றிலும் வரும் 'ப' வின் ஒலி ஒரே மாதிரியாத இருக்கிறதா என்று உச்சரித்துப் பார்த்தால், மாறுபாடு நன்கு தெரியும். எனவே, எழுத்துக்கள் மிகக் குறைவாய் இருப்பதனால் இந்த மாறுபாடுகள் ஏற்படுகின்றன: இவற் றுடன் சொற்களை எழுதும்போதும் எழுத்துப் பிழைகள் அதிகம் இடம் பெறவும் வழி உண்டாகிறது தமிழில் க’ என்ற எழுத்தை ஆங்கிலத்தில் Ka' என்று இரண்டு எழுத் தாலேதான் எழுத வேண்டும். அதுவே சில இடங்களில் 'Ca' என்றும் எழுதப்பெறுகின்றது. Ka அல்லது ca: என்ற இரண்டு எழுத்துக் கூட்டுத் தமிழில் வரும்போது 'க' வும் க்+அ என்ற இரண்டு எழுத்துக்களின் சேர்க்கையே என நன்கு உணர முடியும். தமிழில் அவ்வாறு சேர்ந்த எழுத்துக்களையெல்லாம் தனித்தனியாகப் பிரித்துச் சார் பெழுத்துக்கள் என வகைப்படுத்திவிட்டார்கள். அதுபோல ஆரியம், தெலுங்கு போன்ற நம் நாட்டு மொழிகளிலும் இந்த வகையினைக் காணலாம். எனவே, தமிழில் முதல் எழுத்துக்களாகக் கணக்கிடும் முப்பதே எழுத்துக்கள் உள்ளன எனக் கொள்ளல் பொருந்தும். வேறு சில மொழிகளில் தமிழைக் காட்டிலும் ஒலி மாறுபாட்டிலும் பிறவற்றிலும் சில எழுத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. அவை பற்றி யெல்லாம் நாம் இங்கே நினைக்க வேண்டா. தமிழில் எழுத் துக்கள் அதிகம் உள்ளன; அவற்றைச் சுருக்க வேண்டும்’ என்பார்க்கு அவ்வாறு தமிழில் அதிக எழுத்துக்கள் இல்லை எனவும் எனவே குறைவு தேவை இல்லை எனவும் காட்டவே இவ்வளவும் எழுதவேண்டி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/33&oldid=775107" இலிருந்து மீள்விக்கப்பட்டது