பக்கம்:நல்ல தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 37 வினையே முக்கியமானது. வினைச்சொல் இன்றேல், மொழி யால் பயன் இல்லை எனவே, தமிழ் இலக்கண நூலோர் வழங்கிய பெயர்கள் வாழ்வின் நிலைக்களன்களாகவே அமை கின்றன. இந்த இலக்கண அமைதியை நன்கு ஆராய்ந்தால், இன்னும் எத்தனையோ உண்மைகளைக் காண இயலும். நாம் அவற்றை விட்டு மேலே செல்வோம். வினைச்சொல் காலம் காட்டும் என்றேன் அல்லவா? ஆம், செய்பவனுடைய செயலையும், அச்செய்பவனையும், காலத்தையும், கருவி, நிலம், செய்பொருள் என்ற ஆறு பிரிவையும் காட்டுவது வினை என்பார்கள். இவ்வாறு விளக்கமாகக் காட்டுவதைத் தெரிநிலை வினை என்பார்கள். குறிப்பு வினை என்ற ஒன்றும் உண்டு அது செயலுக்கு உரிய வனை மட்டும் காட்டுவது அது அதிகமாக வழக்கத்தில் பயின்று வாராதது என்றாலும், அது பற்றியும் அறியத்தான் வேண்டும். மேல் வந்தாள்' என்று பார்த்தோம். அதில் எல்லாப் பொருளும் விளங்குகின்றன. எனவே, அது தெரி நிலை வினை. இனிக் குழையினான்' என்பதைக் குறிப்பு வினை என்பர். குழையை உடையவன்' என்பது பொருள். இது அவன் குழையை உடையவன்' என்று வினைக்கு முத லாகிய அவனை மட்டும் உணர்த்துகிறது. இது பற்றி இவ் வளவே போதும், இனி இவ் வினை பற்றிய பல விளக்கங்கள் உள்ளன. ஒன்றின் வின்ை முடிந்தால் முற்றுவினை என்றும், குறைவாக நின்று தன் வினையை முடிக்க மற்றொன்றை அவாவி நின் றால் எச்சவினை என்றும் சொல்லுவர். ஒரு சொல் பெயர் எஞ்சி நின்றால் பெயரெச்சமென்றும், வினை எஞ்சி நின் றால் வினை எச்சம் என்றும் பெயர் பெறும். வந்தான்' என்பது முற்றுவினை வந்த மனிதன்' என்பதில் வந்த” என்ற வினை மனிதன் என்ற பெயர் எஞ்சி நின்றதால் பெய ரெச்சம், வந்து போனான் என்பதில் வந்து' என்ற வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/41&oldid=775125" இலிருந்து மீள்விக்கப்பட்டது