பக்கம்:நல்ல தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கல்ல தமிழ் போனான் என்ற வினை எஞ்சி நின்றதால் வினை எச்சம். இனி இவ்வினைச் சொல்லைத் தமிழ் இலக்கண நூலோர் பல உறுப்புக்களாகப் பிரிப்பார்கள். சொல்லைப் பாட்டின் சந்த இசைக்காகப் பிரிக்கும் முறை ஆங்கிலம் முதலிய மொழி களில் உண்டு. தமிழ், ஆரியம் போன்ற மொழிகளில் சொல் லைப் பல்வேறு வகையாகப் பகுத்து, அதன் ஒவ்வொரு பகுப் 'இன்னின்ன காட்டும் என்று விளக்கும் முறை உண்டு. அவ் வாறு பிரிக்கும்போது அமையும் பகதி அல்லது முதல் நிலை கொண்டே மொழியின் வரலாற்றை அறிவர். இந்திய நாட்டுப் பல்வேறு மொழிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர் *ள் இந்த வகையில் இன்னின்ன சொற்கள் இன்னின்ன இனத் தைச் சேர்ந்தன எனக் கண்டு விளக்குவர். இன்று சில சொற்கள் தமிழ்ச் சொற்களா, ஆரியச் சொற்களா என்று எண்ணி எண்ணி மயங்கும்' நிலையெல்லாம் இந்த முதல் நிலையைச் சரியாக ஆராய்ந்து பகுத்துக் கண்டால் நிச்சயம் நீங்கும். எனவே, வின்ை மொழிக்கு முதலாக அமைவதோடு மொழிச் சிக்கல்களை நீக்கி அவ்வம்மொழி இனத்துக்கு உரிய சிறப்பியல்புகளைக் கெடாமலும் காத்துக் கொள்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும். அத்தகைய பகுப்புக்களில் பகுதி, விகுதி, இடைநிலை மூன்றுமே இன்றியமையாதன. பகுதி தொழிலையும், விகுதி சய்பவனையும், இடைநிலை காலத்தையும் காட்டும். இத்தகைய நுண்ணிய வகையில் எழுத்துக்களை அமைத்துச் சொல்லாக்கிப் பொருள் உணர வைக்கும் நிலை, ஒவ்வொரு சொல்லையும் பகுக்கும் காலந்தோறும் எண்ணி எண்ணி மகிழ வேண்டி ஒன்றாகும். எனினும், இந்த அடிப்பட்ை களை நன்கு உணராத பல மாணவர்கள் -ஏன்?-பெரியவர் களுங்கூட-இவற்றைப் பிரித்து வகை கான முடியாது மயங்குகின்றார்கள். அதற்குக் காரணம் இம்மூன்றையும் இணைக்க இன்னும் மூன்று உடன் வருவதேயாம். அவை, சந்தி, சாரியை, விகாரம் என்பன. இவை மூன்றும் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/42&oldid=775127" இலிருந்து மீள்விக்கப்பட்டது