பக்கம்:நல்ல தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் அமைப்பு 39 சொற்களை எளிதில் பிரிக்கலாம். இவை கலந்தால் பிரிப்பது சற்றுக் கடினம். எனினும், வீடு கட்டக் கற்களை உபயோகிக் கும் போது மணலும், நீரும், சுண்ணாம்பும், சிமிட்டியும் தேவையாவது போன்று, முடிந்த சொற்களை ஆக்கும்போது இவற்றை இடமறிந்து சேர்த்தேயாக வேண்டும். எனவே, இவையும் சொற்களுக்குத் தேவையாகின்றன. பிரிப்பவர் நன்கறிந்து பிரிக்க வேண்டும். வினைச்சொற்களின் பாகுபாடுகள் பல. அவற்றையெல் லாம் வழக்கொடு பின் விளக்க வரும் காலத்தில் காணலாம். இப்போது இந்த அளவோடு அமைவோம். இப்பெயர் வினை களைச் சேர்க்கும்போதும் வாக்கியம் அல்லது சொற்றொடர் களை அமைக்கும்போதும் இடையிடையில் வந்து உதவுவன இடைச்சொல் என்றும், இப்பெயர் வினைக்கு உரிய பொருள் களின் பண்பை விளக்கும் தன்மை பெற்று இவற்றைச் சார்ந்து வருவன உரிச்சொல் என்றும் பாகுபடுத்தப்பட்டுள் ளன. சிலர் இவற்றையும் சேர்த்துத் தமிழில் சொற்கள் நான்கு வகை என்பர். அது பொருந்தாது என்பது மேலே கண்டோம். எனவே, தமிழில் எழுத்துக்கள் இருவகை -உயிரும் மெய்யும் என. அவை போன்றே சொற்களும் இரு வகை-பெயரும் வினையும் என. இவற்றின் வழக்கு வழி நல்ல தமிழ் உருவாவதைத் தொடர்ந்து காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/43&oldid=775129" இலிருந்து மீள்விக்கப்பட்டது