பக்கம்:நல்ல தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சொற்களின் பாகுபாடுகள் சொற்களைத் தமிழில் சிறப்பாக நான்கு வகையாக்கு வர் என்றும், அவை பெயர், வினை, இடை, உரி என்று வகுக்கப்பெறும் என்றும், அவற்றுள் பெயர், வினை இரண் டுமே அடிப்படை என்றும் கண்டோம். இச்சொற்களால் ஆக்கப்பெறும் வாக்கியங்கள் பற்றியும் அவற்றின் அமைப்பு முறை பற்றியும் அறியுமுன் இச்சொற்களின் பல்வேறு வகை களைப் பற்றியும் அறிந்து கொள்ளல் அவசியம். தமிழில் வழங்கும் சொற்களை இந்த முறையிலன்றி வேறோரு வகையாகவும் பிரிப்பார்கள். அந்தப் பகுப்பைப் புரிந்துகொண்டால் நல்ல தமிழைப்பற்றி உண்மையிலேயே நன்கு அறிந்தவர்கள் ஆவோம். பெயர் வினைகளின் அடிப் படையில் பிரிக்கும் தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரி சொல் என்னும் இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவற் றுடன் தமிழில் வழங்கும் பிற சொற்களாகிய திசைச்சொல், வடசொல் என்னும் இரண்டையும் சேர்த்து நான்கு வகை யாகக் கணக்கிட்டிருக்கின்றனர். இவற்றைப் பகுத்துப் பார்த்தால், இன்று உள்ள பல சிக்கல்கள் நீங்கும். தொல்காப்பியர் இந்தப் பகுப்பை எந்த முன் இயலோ ரும் தொடர்பு படுத்தாது, பின் சொல்லதிகாரக் கடைசி இயலாகிய எச்ச இயலில் எடுத்துக் காட்டியுள்ளார். இத னால், இந்தப் பகுப்பு முன்னது போன்று அத்துணைச் சிறந்த தன்று என்பார்கள். என்றாலும், இவையும் தமிழ் மொழி இயங்க உதவுவனவே என்று கொண்டு, இவற்றைப் பற்றி யும் அறிந்துகொள்ளல் நல்லது அல்லவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/44&oldid=775131" இலிருந்து மீள்விக்கப்பட்டது