பக்கம்:நல்ல தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் பாகுபாடுகள் 41 இயற்சொல் என்பது இயல்பாய் நின்று, யாதொரு திரிபும் மாறுபாடும் இன்றித் தமிழ்மக்களுக்கு எளிதில் விளங், வல்லது மண், பொன் வந்தான், நடந்தான் என்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டுவர் உரையா சிரியர். திரிசொல் என்பது சொல் நிலையும் பொருள் வகை யும் திரிந்து மாறுபட்டு வருவது. இது இயற்சொல் போன்று அவ்வளவு எளிதாகப் பொருளை விளக்காது. சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்தாம் பொருள் காண முடியும். இத் திரி சொல்லை ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லெனவும் இரண்டாகப் பிரி, தொல்காப்பியர். நன்னூலார் இவை எளிதில் பொருள் உணர இயலாதன என்பர். கிள்ளை, சுகம், தத்தை’ என் பன ஒரு பொருள் குறித்த பல திரிசொல் என்னும் டு, என்பது ஐயம், அசைநிலைக்கூற்று, முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல் என்றும் உதாரணம் காட்டுவார்கள். இவை எந்த இடத்தில் என்ன பொருளைக் குறிக்கின்றன என்பது சற்று ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டி வருவன வாதலால் இவற்றைத் திரிசொல் என்று அமைத்தனர். இனி எட்டு, கொட்டு, தாமரை போன்றவற்றையும் இப் பகுதியில் அடக்குவர் சிலர். தனித் தனியாக எளிய இயற் சொல் போன்று இவை பொருள் தருகின்றன. இவற்றையே பிரித்து (எள் +துள் = எட்டு) எள்ளைத் தின், (கொள்+து) கொள்ளைத் தின், (தா--மரை) தாவும் மான் எனவும் பொருள் கொள்வதால், இவற்றையும் திரிசொல் என்பார் கள். இவ்வாறு இரு பொருள்பட்ட சொற்களின் அடிப்படை யிலேயே 'சிலேடை அணி என்னும் செய்யுளை அழகு செய் யும் வகையிலேயே நல்ல அணி உண்டாயிற்று. அது பற்றி வாய்ப்பு நேர்ந்தால் பின்னர்க் காணலாம். இனி, திசைச்சொல் என்பது யாது? தமிழ்நாட்டைச் செந்தமிழ் வழங்கும் நிலம் எனவும் கொடுந்தமிழ் வழங்கும் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/45&oldid=775133" இலிருந்து மீள்விக்கப்பட்டது