பக்கம்:நல்ல தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்ல தமிழ் நிலம் எனவும் இரு வகையாகப் பிரித்து, செந்தமிழ் சேர்ந்த (கொடுந்தமிழ் வழங்கும்) பன்னிரு நிலத்திலும் வழங்கும் சொற்களும், நாட்டில் பிற பகுதிகளில் வழங்கும் சொற் களும் செந்தமிழ்ச் சொற்களோடு கலந்து வருவதைத் திசைச் சொல் என்பர். தமிழ் நாட்டில் பாண்டி நாட்டைச் செந் தமிழ் நாடு என்றும், பிறபகுதிகளை அதைச் சேர்ந்த பன்னிரு நாடுகள் என்றும் கொள்வர். இன்றைய மலையாள நாடும் அதில் அடங்கும். தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பால் வழங் கும் மொழிகளும் திசை மொழிகளே. தமிழோடு பதினெட்டு மொழிகள் நம்நாட்டில் வழங்கினவாம். செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில்-சிந்தனை ஒன்றுடையாள்'. என்று பாரதியாரும் இதை ஒட்டித்தான் பாடினார். எனவே, இந்தப் பதினெட்டு மொழியிலும் தமிழ் ஒழிந்த பிற மொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கினால், அவற்றையும் திசைச் சொல்லெனத் தமிழில் சேர்த்துக்கொள்வர். தொல்காப் பியர் இவற்றைக் கூறாது, "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு கிலத்தும தங்குறிப் பினவே திசைச் சொற் கிளவி' (எச்ச 4) என்றார். அவர் காலத்து அமைப்பிற்குப் பொருந்தியது அது. நன்னூலார் காலத்தில் பிற மொழிகளிலிருந்தும் பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினமையின் அவர் அவற்றை யும் சேர்த்தார். அதுதானே இலக்கண மரபு! இவைகளைத் தவிர, இருவரும் வடசொல்' என்னும் நான்காவது பிரிவையும் சொல்லுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தின் வடக்குப் பகுதியன்றி மற்றப்பகுதி கள் கடலாய் இருந்தமையின், அத்தமிழ் நாட்டு மொழியில் வடக்கிலிருந்து வந்து வழங்கிய அத்தனையும் வடசொல் எனக்குறித்தார் எனக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களும் வேங்கடத்துக்கு வடக்கே இருக்கும் நாடுகளையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/46&oldid=775135" இலிருந்து மீள்விக்கப்பட்டது