பக்கம்:நல்ல தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் பாகுபாடுகள் 43. மொழிபெயர் தேயம்' எனவே குறிக்கின்றன. எனவே, அந்தப் பகுதியிலிருந்து வரும் சொற்களையெல்லாம் வட சொல்' என்ற தொடரே குறிக்கின்றமையின், மேலே நன் னுாலார் குறித்தபடி பிற சொற்களைப் பிரித்துக் கூற வேண்டிய தேவை அவருக்கு உண்டாகவில்லை போலும்! நன்னூலார் இவ்வடசொல்லை வடக்கே வழங்கும் பிற சொற்களினின்றும் விலக்கி ஆ. ரி ய ச் .ெ சா ல் என்றார். அவ்வாறு அம்மொழியிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள், இருமொழிக்கும் பொதுவான எழுத்துக்களாலும், ஆரியத்துக்கே உரிய சிறப்பெழுத்தாலும் இவ்விரண்டினா அலும் வந்து வழங்கும் என்பர். இச்சூத்திரத்துக்கு உரை கூறிய சங்கர நமச்சிவாயர் நல்ல விளக்கம் தந்துள்ளார். 'ஆரியச்சொல் சிதைந்து வடசொல் ஆதலின் இவை சொல் லால் செந்தமிழ்ச் சொல்லை ஒவ்வாமை கருதி, எழுத்தான் ஒக்குமென்பார், எழுத்தான் இயைவன, என்றார்' எனக் காட்டுவர்; எனவே, ஆரியம் சிதைந்து தமிழில் வந்து வழங்கும்போதே அது வடசொல் எனப் பெயர் பெறுகிறது எனக் காட் டு வ ர். அன்றி, இன்று நாம் காண்பது போன்று தமிழ் நாட்டுக்கு வடக்கே வழங்கும் அத்தனை மொழிகளிலும் வடசொற்கள் சிதைந்து வழங்குவதைக் காண் கிறோம்; அந்த வகையிலேயும் அவற்றின் தமிழ் வழக்கை யும் சிலர் கூறுவர். நமக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் இங்கே தேவையில்லை. வடசொல்' சமஸ்கிருதம்', 'ஆரியம்' என்ற மூன்றும் வேறுபட்டவை என்பதை என் வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்' என்ற நூலில் தெளிவாகக் காட்டி யுள்ளேன். தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழில் பிற சொற்கள் வந்து வழங்கின என்பதே நாம் அறிவது. இதை எண்ணும் போது இந்தக் காலத்தில் நிலவும் மாறு பட்ட கருத்துக்களைப்பற்றி ஒரு சிறிது கூறியே மேலே செல்ல வேண்டியுள்ளது. தமிழில் பிற மொழிச் சொற்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/47&oldid=775137" இலிருந்து மீள்விக்கப்பட்டது