பக்கம்:நல்ல தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நல்ல தமிழ் கலத்தல் நல்லதா கெட்டதா என்ற வாதம் நாட்டில் வலுப் பெற்றுள்ளது. சிலர் வடமொழிச் சொற்களை அப்படி அப்படியே ஒலி மாறாமல் எழுத விரும்புகின்றனர். சிலர் தனித் தமிழில் எழுத நினைக்கின்றனர். ஒரு சிலர் தமிழ்ச் சொற்களை வடசொற்களென்றும், மற்றும் சிலர் வடசொற் களைத் தமிழ் சொற்களென்றும் வாதிடுவர். பிற மொழிக் கலப்பால் மொழி கேடுறும் என்பாரும், அதனால் மொசி வளர்ச்சியுறு மென்பாரும் நாட்டில் உளர். ஒரு சிலர், எது எப் படிப் போனால் நமக்கென்ன?’ என்று வாய் மூடி மெளனிய ராய் உள்ளனர். சற்று ஆராய்ந்து பார்த்தால், இந்த வாதங் களுக்கு இடமேயில்லை. மொழி வரலாற்றை நோக்கும் போது எந்த மொழியும் பிற மொழி கலவாமல் தனித்து இயங்கிற்று என்று சொல்ல இயலாது. தமிழிலும் மிகு பழங்காலந்தொட்டே இந்தக் கலப்பு உண்டு என்பதைத்தான் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் திசைச்சொல், வடசொல் என் னும் வழக்குக்களால் வழங்குகின்றன. எனவே, பிறமொழிச் சொற்களின் கலப்பால் ஒரு மொழி கெடும் என்று கூற இய லாது. என்றாலும், அக்கலப்புக்கு அதே இலக்கண நூலோர் வகுக்கும் வழிகளை மறந்துவிடுவதாலேதான் தொல்லை உண்டாகிறது. தமிழில் வழக்கத்தில் உள்ள நல்ல சொற்கள் இருக்கவும் அவற்றை நீக்கிப் பிறமொழிச் சொற்களைப் புகுத்தல் மரபுக்கும், இலக்கண அமைதிக்கும், பிற நல்ல இயல்புகளுக் கும் மாறுபட்டதாகும். நீர்' என்பதற்குப் பதில் 'ஜலம்' என்பதோ, மலர், என்பதற்குப் பதில் புஷ்பம்’ என்பத்ோ வேண்டாதனவாகும். ஆனால், அதே சமயத்தில் தமிழில் வழக்கல்லாத பல சொற்களைத் தமிழில் எடுத்து வழங்கு வதில் தவறு இல்லை. விஞ்ஞானம் வின்ரந்து வளர்ந்து வரும் இந்நாளில் எத்தனையோ ஆங்கிலச் சொற்களை அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/48&oldid=775138" இலிருந்து மீள்விக்கப்பட்டது