பக்கம்:நல்ல தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் பாகுபாடுகள் 45 எடுத்தாள வேண்டியுள்ளது. சிலவற்றைத் தமிழ்ப்படுத்தி னாலும் அவை விளங்கா பொருளும் மாறுபடலாம். அது போன்றே அக்காலத்திலும் சில ஆரியச் சொற்களையும் பிற வடசொற்களையும் எடுத்தாள வேண்டிய தேவை இருந்திருக் கும். பிற சொற்களையே தொட மாட்டோம்,' என்றால் அறிவு வளர்ச்சி பெறாது. அதனாலேதான் தொல்காப்பியர் அவற்றை எடுத்தாள இலக்கணம் வகுத்தார். பலர் அதை மறந்த காரணத்தினாலேயே வாதங்கள் உண்டாகின்றன. தமிழில் நல்ல சொற்கள் இருக்க பிற மொழிச் சொற் களைப் பயன்படுத்துவது தவறு என்பதைக் காட்டினேன் அல்லவா? அது போன்றே பிறமொழிச் சொற்களை எடுத் தாள வேண்டுமாயின், அவற்றைத் தமிழ்முறைக்கு ஏற்பவே மாற்றி, அவையும் தமிழ்ச் சொற்கள் போல ஒலிக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே தொல்காப்பியரின் விளக்கமாகும், - வடசொற் கிளவி வட்எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே." (எச்ச. 5) என்பது அவர் வாய்மொழி. எனவே, வடசொல்லையோ பிற சொற்கன்ளயோ எடுத்தாளும் போது அவற்றில் உள்ள அந்தந்த மொழி எழுத்துக்களை நீக்கி, அவற்றின் பொருள் கெடாத வகையில் தமிழ்ச்சொற்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அதன் முடிவு. அதற்குப் பிற்காலத்தில் பல வகையில் இலக்கணங்களை அமைத்துள்ளார்கள். புஷ்பம்' என்ற சொல்லைப் புட்பம்' என மாற்றி வழங்க லாம். இதுவும் மலர் என்ற வழக்காறு இல்லாவிட்டாறானே என்னலாம். ஆனால், சில சொற்கள் இன்றியமையாது தேவையாய் உள்ளன. லக்ஷ்மணன் என்ற சொல்லைத் தமிழில் சிலர் அப்படியே எழுதுகின்றனர். ல தமிழ் இலக் கணப்படி மொழிக்கு முதலில் வாராது. அதனால், இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/49&oldid=775139" இலிருந்து மீள்விக்கப்பட்டது