பக்கம்:நல்ல தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நல்ல தமிழ் சொல்லைத் தமிழ் அறிஞர் வேண்டா என்று சொல்ல வில்லை. லட்சுமணன்' எனச் சிலர் எழுதுவர். அதுவும் தவறு. தமிழ் இலக்கண மரபுப்படி இதை இலட்சுமணன் அல்லது இலக்குவன்' என்றே எழுத வேண்டும். எம்மொழி யையும் ஏற்கும் மொழிவழி மாற்றி அமைத்துக்கொள்ளுதலே மொழி இலக்கண அமைதியாகும். இலக்கணத்துக்கு மட்டு மன்ற் இந் நியதி இலக்கியத்துக்கும் பொருந்தும். வட மொழி இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பர் அதைத் தமிழ் மரபோடு சார்த்தி எழுதிய காரணத்தாலேதான் பல எதிர்ப்புகளுக்கு இடையிலும் அது வாழ்கிறது அல்லாத பல மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் தோன்றிய காலத் துக்குப்பின் நெடுநாள் வாழாது மறைகின்றன. எனவே, தமிழில் பிற மொழியை எடுத்தாள்வது தவறன்று என்பதும், அப்படி எடுத்தாளும் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் இல்லாத வழியே அவற்றை எடுத்தாள வேண்டும் என்பதும், அவ்வாறு எடுத்தாளுங்கால் அப்பிற மொழி எழுத்துக்களைத் தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி, தேவையும் இடமும் கருதிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் பண்டைய தமிழ் இலக்கண நூலோர் கண்ட முடிவு என்பதை அறிய வேண்டும். இவை களெல்லாம் நல்ல தமிழ் உருவாக நாம் கைக்கொள்ள வேண்டிய முறைகளாகும், தமிழில் உள்ள சொற்களை இப்படி இருவகையாகப் பகுத்தனர் இலக்கண நூலோர். அவற்றின் தேவையையும், இடத்தையும், தன்மையையும் அறிந்து பயன்படுத்துவதே நல்ல் தமிழ். இச்சொற்களின் கூட்டு அமைப்பே வாக்கியம்பாட்டு-உரைநடை-எல்லாம். எனவே, இவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். இச்சொற்களைப்பற்றி அறியும் போது மற்றொன்றை யும் நினைக்க வேண்டியுள்ளது. பெயர், வினை என்று சொற்களைப் பாகுபடுத்தத் தொடங்கிய தொல்காப்பியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/50&oldid=775143" இலிருந்து மீள்விக்கப்பட்டது