பக்கம்:நல்ல தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் பாகுபாடுகள் 4ገ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, என்ற முதற் சூத்திரத் தானே தொடங்குகிறார். எனவே, தமிழில் அசைச்சொற்கள் அதிகமாகப் பயின்று வரவில்லை என்பதை உணர வேண்டும். சொற்களைப் பொருள் கருதியே அமைத் தார்கள். எனவே, ஒவ்வொரு பொருளையும் நுணுகி ஆரா யும் வகையில் தமிழில் சொற்கள் அமைந்திருந்தன. அத னால், இடுகுறி' என்ற வழக்கம் பழங்காலத்தில் இல்லை. நன்னூலார் காலத்தில் சில சொற்களின் தோற்றத்திற்குக் காரணம் விளங்கவில்லை. எனவே, அவற்றை இடுகுறி என்றும், பொருள் அறிந்தவற்றைக் காரணம் என்றும் பிரித் தார்கள். எவ்வாறாயினும், நல்ல தமிழ் உருவாவதற்குச் சொல்லைச் செட்டாக உபயோகப்படுத்த வேண்டும். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்ற முறை இந்த அடிப்படையில் உண்டானதேயாகும். இனிச் சொற்களைப் பற்றி மற்றொன்று கண்டு இப் பகுதியை முடிக்கலாம். தமிழில் கண்ட சொற்களைக் கண்ட பொருளுக்குப் பயன்படுத்த இயலாது. இன்னின்னவற்றிற்கு இன்னின்ன சொற்களை உபயோகிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.” என்று நன்னூலார் இலக்கணம் வகுத்துள்ளார். அவர் உயர்ந்தோர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பதை விளக்க வில்லை. தொல்காப்பியரோ, மரபியல் என்றே இயல் ஒன்று வகுத்து, அதில் வழக்கத்தில் உள்ள சொற்களை நன்கு விளக்கிக் காட்டுகின்றார். அவற்றையெல்லாம் இங்கே நாம் விளக்கிக்கொண்டிருக்க வேண்டா. என்றாலும், இரண்டொன்று காணல் சிறந்தது எனக் கருதுகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/51&oldid=775145" இலிருந்து மீள்விக்கப்பட்டது