பக்கம்:நல்ல தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நல்ல தமிழ் தமிழ் முறைப்படி மக்களினத்தில் மட்டுமின்றி விலங் கினத்திலும் ஆண் பெண் வேறுபாடுகள் உண்டென்றும், ஆற்றை இன்னின்ன வகையிலேதான் வழங்க வேண்டு சன்றும் கூறுவர். ஆண் குரங்குங்குக் கடுவன்' என்பதும், பெண் குரங்குக்கு மந்தி' என்பதும் பெயர். அவ்வாறே 'களிறு, பிடி' என்பன யானையில் ஆணையும் பெண்ணையும் குறிப்பன. பறவைகளின் ஆண்களுக்குச் சேவல்' என்பது பெயர். ஆனால், அது மயிலுக்குப் பொருந்தாது. இவை போன்ற பல பெயர்கள் விலங்கினத்தில் ஆணையும் பெண் "யும் பிரிக்கின்றன. பறப்பனவற் றுள்ளும் ஊர்வன வற் றுள்ளும் உள்ள வேறுபாடுகளை விளக்கும் நுண்ணிய பயர்களும் உள்ளன. இளமையில் உள்ள சிலவற்றைக் கன்று என்றும், சிலவற்றைக் குட்டி என்றும், சிலவற்றைப் பிள்ளை என்றும், சிலவற்றைக் குழவி என்றும் வழங்குகின் றோம். எவை எவை எவ்வெவற்றிற்குப் பொருந்தும் என் Hனவற்றையெல்லாம் விளக்தி இங்கே காட்ட இயலாது. ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். இந்த வகையில் மரபறிந்து நல்ல சொற்களை இடம் கருதிப் பயன்படுத்தினால், நல்ல தமிழ் உருவாவதற்கும் ஐயம் உண்டோ! இச்சொற்களை வாக்கியங்களில் அமைக்கும் போது சில சிேறைகளைக் கையாள வேண்டும். ஆண் பெயர்க்கு ஆண் 'ால் வினையும் பெண் பெயர்க்குப் பெண்பால் வினையும் கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு ஆசிக்கு ஒருமையும், பன்மைக்குப் பன்மையும் அமைகின்றன. சிலர் இவற்றில் தவறிவிடுகின்றனர். அதற்கேற்பத் தமிழில் சில சொற்கள் ஒருமையா பன்மையா என்று கூற இயலாத ' கடுமாற வைக்கின்றன. படை என்பதைக் காண்போம். 'படையில் பலவும் சேர்ந்திருக்கும். நால்வகைப்படை உண்டு. ஒவ்வொரு படையிலும் பலர் உளர்; பல உள்ளன. இச்சொல்லை எழுவாயாகப் பயன்படுத்தினால் பயனிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/52&oldid=775147" இலிருந்து மீள்விக்கப்பட்டது