பக்கம்:நல்ல தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களின் பாகுபாடுகள் 49 எப்படி அமையும்? பன்மைய்ாக அமையும் என்று சிலர் சொல்லலாம். அது பொருந்தாது. படை சென்றது,' என்று ஒருமையாலேயே கூற வேண்டும். புத்தகம் உள்ளது, என்றே கூறுங்கள். அதில் பல ஏடுகள் இருப் பினும் ஒன்றாகவே கொள்ள வேண்டும். வெந்தவை பல சோறுகள் ஆயினும், அடிசில் வெந்தது' என்றே முடிக்க வேண்டும். இதைக் கருதியே பலவின் இயைந்தன ஒன்றெனப் படுமே” என்று விதி வகுத்துள்ளனர். இவ்வாறு சொற் களை ஆய்ந்து பயன்படுத்தும் வழிகள் பல. அவை எழுதிப் பயிலப் பயிலப் பழக்கத்தில் வந்து அமைந்துவிடுகின்றன. இங்கே நான் இலக்கண வகைகளில் ஒரு சிலவற்றையே எடுத்துக் காட்டினேன். இவை அமையும் என்று கருதி மேலே செல்லலாம். இனி இந்தச் சொற்கள் எப்படிச் சொற்றொடர் அல்லது வாக்கியம் ஆகின்றன என்பது பற்றியும், அவ்வாக்கிய அமைப்புக்கள் நல்ல தமிழை எவ்வாறு உருவாக்குகின்றன என்பது பற்றியும் காணலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/53&oldid=775149" இலிருந்து மீள்விக்கப்பட்டது