பக்கம்:நல்ல தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சேரும் சொற்கள் சொற்களாலாகிய வாக்கியங்கள் அல்லது சொற்றொ டர்களைப் பின்பற்றி அறிந்துகொள்வதற்கு முன் அச்சொற்கள் ஒன்றோடொன்று சேரும்போது எவ்வெவ்வாறு அமைந்து நிற்கின்றன என்பதைக் காணல் வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொற்கள் சேரும் போது மாற்றங் கன்ளக் காண இயலாது. எனினும், தமிழிலும் இன்னும் சில மொழிகளிலும் சொற்கள் சேரும் போது உண்டர்கும் சில மாறுதல்களைக் கண்டு, அந்த மாற்றங்கள் அடிப்படை யிலேயே இலக்கணங்களும் வகுத்துள்ளார்கள். தமிழில் அதைப் புணர்ச்சி என்கின்றோம். அந்த இலக்கணம் கூறும் பகுதிக்கும் புணரியல் என்பதே பெயர். இரண்டு ஒன்று கூடுவதற்குப் புணர்ச்சி என்பது பெயர். இங்கே சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்கின்றன. அவ்வாறு சேரும்போது அப்படியே நிலை கெடாமல் இருப்பதில்லை. அச்சேர்க்கையினால் சில எழுத்துக்கள் புதியனவாகத் தோன் றலாம்; சில கெடலாம்; சில உரு மாறலாம்; சில நிலை பெய ரலாம். ஒரு சில சொற்கள் இயல்பாகவே நிலை கெடாமல் இருப்பதும் உண்டு. இவற்றையெல்லாம் தொகுத்துத்தான் புணரியல் என இலக்கணம் வகுத்துள்ளார்கள். தொல்காப் பியத்தில் உயிர் மயங்கு இயல், புள்ளி மயங்கு இயல், குற்றிய லுகரப் புணரியல் என்ற மூன்று பகுப்புக்கள் உள்ளன. அப் படியே நன்னூலிலும் உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என்ற மூன்று பிரிவுகளைக் காணலாம். இவை அனைத்தும் சொற்கள் ஒன்றோடொன்று சேரும் காலத்து உண்டாகும் இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சிகளையே காட்டுகின்றன. தமிழில் உயிரும் மெய் யுந்தாமே முதல் எழுத்துக்கள்! அவ்வெழுத்துக்களைக் கடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/54&oldid=775151" இலிருந்து மீள்விக்கப்பட்டது