பக்கம்:நல்ல தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரும் சொற்கள் 51 சியில் பெற்று வரும் சொற்கள் சேரும்போது பெறும் மாற்றங் களைத் தனித்தனியாகப் பிரித்து இவ்வாறு காட்டியுள்ளார் கள். உருபுப் புணரியலிலே வேற்றுமை உருபுகளைக் கடைசி யிலேயே கொண்ட சொற்களின் புணர்ச்சியைக் காணலாம். ஏறக்குறைய அதே அடிப்படையிலேதான் குற்றியலுகரப் புணரியல் அமைந்துள்ளது. ஒன்று முதலிய எண்ணுப் பெயர்களே பெரும்பாலும் இந் த ப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு சொற்கள் புணரும் போது முதலில் உள்ள சொற்களின் கடைசியில் உள்ள எழுத்துக்களின் அடிப் படையிலேதான் இந்தப் புணர்ச்சி இலக்கணம் அமைக்கப் பெற்றுள்ளது. இரண்டு சொற்கள் சேரும்போது ஒன்றை மற்றொன்றி லிருந்து பிரித்துக் காட்ட வேண்டுமல்லவா? ஆம்; அதனா லேயே நிலைமொழி, வருமொழி என அவற்றை வழங்கினர். முதலில் உள்ளது நிலைமொழி; அதனோடு வந்து சேருவது வருமொழி. இந்த மொழிகளின் சேர்க்கையே புணர்ச்சி. சொற்கள் சேரும்போது ஏன் இவ்வாறு மாறவேண்டும் மொழியின் அமைப்பு அப்படி, என்று சுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். எனினும், எல்லா மொழிகளிலும் இத் தகைய மாற்றம் இல்லையே?’ என்ற வினா எழும். ஒவ் வொரு மொழியிலும் அதனதன் இயல்புக்கு ஏற்ற வகையில் சிற்சில விதிகள் அமைந்துள்ளன. தமிழ் இழுமென் மொழி யாக உருப்பெற்றது என்பர். அதன் ஒசை நலம் தனித் தன்மை வாய்ந்தது. ஒரு பொருளைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அச்சொற்களுக்கு இடையில் அமையும் ஒசையானது குறைந்தோ, கெட்டோ, அன்றித் தூண்டித்தோ ஒலிக்கக் கூடாது. ஒலித்தால், சொல் நடை யின் அழகு குறைவதோடு பேசுவதற்கு வேண்டிய முயற்சியும் அதிகமாகத் தேவையாகும். இதனால் மனித சக்தியை அதிகமாகத் தேவையற்ற வகையில் உப்யோகிக்க வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/55&oldid=775153" இலிருந்து மீள்விக்கப்பட்டது