பக்கம்:நல்ல தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கல்ல தமிழ் யுள்ளது. அவனை கண்டேன்' என்றால் பொருள் விளங்கி விடுகிறது என்பது உண்மைதான். என்றாலும், இரண்டை யும் இப்படியே சொல்லும்போது இடையில் ஓர் ஒலிப்பள்ளம் உண்டாவதைச் சொல்லிப் பாருங்கள். அப்பள்ளத்தை நிறைக்கவே க் என்ற 'க'வ்வுக்கு ஏற்ற ஒற்றும் சேர்க்கப்படு கின்றது. 'க்' என்ற மெய் எழுத்துத் தனியாகப் புதுப் பொருள் ஒன்றும் தரவில்லை; என்றாலும், அந்த மொழியின் இன்னோசைக்கு உறுதுணை யாகின்றது. ஒலியெழுப்பும் முயற்சியிலும் மனித சத்தி சற்றுக் குறைவாகவே பயன்படுத் தப்படுகின்றது. ஆகவே, இந்த க்கு, புணர்ச்சியில் இன்றி யமையாததாய் உள்ளது. இப்படிச் சில எழுத்துக்கள் குறைக்க வேண்டிய நிலையும் உண்டாகலாம். வடக்குத் திசை என்ற தொடர் வடக்குப் பக்கத்துத் திசை என்பதை நன்கு விளக்குகின்றது; அதைச் சுருக்கி வட திசை என்கிறோம். இப்படிச் சுருக்குவதால் மேலே நாம் கண்டபடி மனித முயற்சி குறைவுபடுவதோடு, எழுத்துச் சுருக்கமும் எய்திச் சொல்லில் செட்டாக இருக்க முடிகின்றது. இவ்வாறன்றிச் சிலவற்றில் சில சொற்களோ அசைகளோ தோன்றலுமுண்டு. பனையும் காயும் சேர்ந்தால் பனங்காய் ஆகின்றது. இதில் 'ஐ' என்ற எழுத்து நீங்கி 'அம் என்ற சாரியை சேர்கின்றது. இப்படி இரண்டு சொற்கள் சேரும் போது மாற்றங்கள் அவ்வவற்றின் தேவையை ஒட்டி அமை கின்றன. 'பனைக்காய்' என்றாலோ, பனைக்ர்ய்' என்றா லோ ஓசை இழுமென இனிமையாக அமைவதில்லை என். பதைச் சொல்லிச் சொல்லிப் பார்த்தால் தெரியும். எனவே 'ஐ' என்ற ஓர் எழுத்துக் கெட, அம்' என்ற ஈரெழுத்துச் சாரியை வரவேண்டியிருக்கிறது. எனவே, இப்புணர்ச்சி வழி மாற்றங்களும் புதுத் தோற்றங்களும் மொழியை நன்கு பேசவும் எழுதவும் பயன்பட்டு, மொழியின் சிறப்பை நன்கு பாதுகாக்கின்றன என்பது பொருந்தும். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/56&oldid=775155" இலிருந்து மீள்விக்கப்பட்டது