பக்கம்:நல்ல தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரும் சொற்கள் 53


---------.

'இவ்வாறு திட்டமாக எப்படி இலக்கணம் வகுக்க முடி யும்?' என்று சிலர் கேட்கலாம். ஏன்?' என்ற கேள்விக்குத் தான் மேலே விடை கண்டு விட்டோம் எப்படி?’ என்ப தற்கும் விடை காண முடியும். பொதுவான இலக்கண விதி களைப்பற்றி நான் முதலில் கூறிய்தே இதற்கும் பொருந்தும், இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் கூறுதல்தானே மரபு! அந்த முறை இந்தப் புணர்ச்சிக்கும் ஏற்றதேயாகும். தொடர் களைப் பயன்படுத்தும் போதோ, அன்றிப் பேசும் போதோ, இயல்பாகவே நா, உதடு, பல் இவற்றின் அசைவின் நிலைக் கும், நல்ல ஒலி அமைப்புக்கும், மொழியின் பிற நல் இயல்பு களுக்கும் ஏற்ப இந்த மாற்றங்கள் அமைந்துவிடுகின்றன. பின் வருகின்ற இலக்கணப் புலவர்கள் இவற்றின் முறையை நுணுகி ஆராய்ந்து முறைப்படுத்தி இவைகளை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்று சிலர் இவை தேவை யில்லை என்று கூடப் பேசலாம். சிலர் விதி யறியாது, புணர்ச்சிக்குத் தேவையான தோன்றலோ, திரிதலோ, கெடு தலோ இன்றித் தம் மனம் போன அமைப்பில் எழுதலாம். என்றாலும், அவர்களும் சற்றே சிந்தித்துப் பார்த்தால், இலக்கண விதிப்படி எழுதுவதும் பேசுவதும் எவ்வளவு பொருத்தமானவை என்பதை உணராமல் போகமாட்டார் கள். அதற்காக எல்லா விதிகளையும் ஒவ்வொருவரும் கற்று மனப்பாடம் செய்து கொண்டு அவற்றின் வழியேதான் எண்ணி எண்ணிப் பேசவேண்டும் என்பதில்லை. அவர்கள் நல்ல தமிழ் பேசினாலும் எழுதினாலும் இயல்பாகவே அவை அமைந்துவிடும். இலக்கணமே அறியாத சிலர் இந்தப் புணர்ச்சி விதிகள் கெடாதபடியே பேசியும் எழுதியும் வரு வதையும் இலக்கணம் பயின்ற சிலர் மாறுபட்டு எழுதிப் பேசிப் பின் எண்ணித் திருத்திக்கொள்வதையும் காண் கிறோம். எனவே, இந்தப் புணர்ச்சி முறைகள் இயல்பாகவே பழகப்பழக அமைவனவாகும். இதனாலேதான் போலும் :செந்தமிழும் நாப்பழக்கம்' என்று பாடி வைத்தார்கள்! இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/57&oldid=775159" இலிருந்து மீள்விக்கப்பட்டது