பக்கம்:நல்ல தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்ல தமிழ் இப்புணர்ச்சி விதியின்படி அமையும் சில அமைதிகளைக் கண்டு மேலே செல்லலாம். இலக்கணத்தை வரையறை செய்த ஆசிரியர்கள் உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக் களையும் தனித்தனி எடுத்து அந்தந்த எழுத்துக்கள் சுற்றில் வரும் சொற்கள் வருமொழி முதலில் வரும் எழுத்துக்களுக்கு ஏற்ப எப்படி எப்படி மாறும் என்பதை எழுதியுள்ளார்கள். 'அகர ஈறு, ஆகார ஈறு , இகர ஈறு, ஈகார ஈறு என்று இப்படிப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களையும் தனித்தனியே பிரித்து உயிர்ஈற்றுப் புணரியல் என அம்ைத்தார்கள்; பின் மெய் எழுத்துக்களைத் தேவைப்படி வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் தனித்தனியாகப் பிரித்து இலக்கணம் காட்டினார்கள். மேலும், வேற்றுமை உருபுகள் ஒருமொழி யோடு சேரும் போது உண்டாகும் மாறுதல்களையும், குற்றி யலுகரப் புணர்ச்சிபோன்ற தனித்தனிச் சொற்கள் புணரும் போது உண்டாகும் மாறுதல்களையும் விளக்கிக் காட்டியுள் ளார்கள். தமிழ் இலக்கணத்திலே இப்பகுதிக்கு அதிக இடம் கொடுத்துள்ளார்கள் தொல்காப்பியரும் நன்னூலாரும். எனவ்ே, இந்த அமைப்பிலேதான் மொழியின் தொடர் இயல் பும் செம்மையும் அமைந்து உள்ளன என்பதை அவர்கள் நன்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவற்றுள் ஒவ்வொன்றை 4ம் நாம் ஆராய்ந்துகொண்டே செல்லின், விரியும். சில வழக் கத்திலேயே வந்துவிடும். ஒரு சிலர் அறிந்தோ அறியாமலோ, சாதாரணமான தவறுகளைக்கூடப் புணர்ச்சியிலேயே செய் கிறார்கள். அவற்றுள் சிலகண்டு அமைவோம். எழுத்துக்கள் மிகும் இடம் என்று புணர்ச்சி விதிகளில் காண்கிறோ மல்லவா? அவற்றுள் பெரும்பாலன வல்லெழுத் துக்களே. இதை வலிமிகுதல் என்று சொல்லுவதும் உண்டு. சிலவிடங்களில் இந்த வல்லெழுத்துத் தன் இனமான மெல்லெ ழுத்தாகத் திரிதல் உண்டு. இனம் என்பது க, ச, ட, த, ப, ற், என்ற வல்லினம் ஆறுக்கும். ங், ஞ, ண, ந, ம, ன, என்ற மெல்லினம் ஆறும் தனித்தனி இனமாக வருவது. இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/58&oldid=775161" இலிருந்து மீள்விக்கப்பட்டது