பக்கம்:நல்ல தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரும் சொற்கள். 55 வல்லின எழுத்துக்களும், அவற்றிற்கு இனமான மெல்லின எழுத்துக்களுமே பெரும்பாலும் புணர்ச்சியில் இடம் பெறு கின்றன. இச்சொற்புணர்ச்சியில் மற்றொன்றையும் இலக்கண ஆசிரியர்கள் முக்கியமாகக் குறிக்கிறார்கள். அதுதான் 'வேற்றுமை, அல்வழி' என்னும் வழக்கு. வேற்றுமை என்பது வேற்றுமை உருபுகளை ஏற்று வருவது. இந்த உருபுப் புணர்ச்சியைப் பற்றித் தனியாக நன்னூலார் சொன்னாலும், இது பிற இடங்களிலும் விளக்கம் பெறவேண்டி உள்ளது, எனவேதான் புணர்ச்சியைப் பற்றி அவர் முதலில் கூறும் போது இந்த இரண்டு வகைகளையும் விளக்குகிறார். தொல் காப்பியரும் உயிர் மயங்கியல் முதல் சூத்திரத்திலேயே இவை இரண்டைப் பற்றியும் காட்டித்தான் மேலே செல்கிறார். எனவே, சொற்றொடர்களை வேற்றுமை என்றும், வேற் றுமை அல்லாத எல்லாவற்றையும் அல்வழி என்றும் பிரிப்பது எளிதாகும். அந்த அல்வழி பலவகைப்படும் என்பதை நன் னுாலார் நன்றாக விளக்குகிறார். இவற்றின் விரிவெல்லாம் இங்கே நமக்கு வேண்டா. பின்பு தொடர்களைப் பற்றிக் காணும் காலத்தில் இவை பற்றி நன்கு ஆராயலாம். இங்கே வேற்றுமையிலும் அல்வழியிலும் வரும் எல்லாத் தொடர் களும் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டே இயல்பாயும், இரித் தும், மிகுந்தும், குறைந்தும் வரும் என்பதை மட்டும் காணு தல் போதும் என நினைத்து இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன். புணர்ச்சி விதிகளில் மிகச்சுலபமான லிதிகளும் சில உள. அவற்றுள் உடம்படுமெய் என்பது ஒன்று. உயிர் எழுத்தோடு உயிர் எழுத்துச் சேர்ந்தால் என்னாகும் என்பதை இவ் வுடம்படு மெய்யே விளக்குகின்றது. மணி என்பதோடு அழகிது என்னுல் சொல் சேரும் காலத்தில் மணியழகிது என்று எழுதுகிறோம். மணி அழகிது என்று சொன்னாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/59&oldid=775163" இலிருந்து மீள்விக்கப்பட்டது